Showing posts with label குளோபல் வார்மிங். Show all posts
Showing posts with label குளோபல் வார்மிங். Show all posts

Monday, March 15, 2010

பூமி வெப்பமயமாதலும், மக்களின் வாழ்நிலையும்…

சூரிய குடும்பத்தின், மூன்றாவது பிள்ளை பூமி. இதில் மட்டுமதான் உயிரினங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. காரணம் பூமிப்பந்தில் உள்ள சாதகமான சீதோஷ்ணநிலைதான். கொஞ்சகாலமாக, இயற்கையுடன் சேர்ந்து மனிதன் இதற்கு அசாதாரணமாக வேட்டு வைத்து:க கொண்டிருக்கிறான். அதிகமாக காரியுமில வாயுவை வெளியேற்றி புவிப்பந்தை தினம்தினம் சூடாக்கிக் கொண்டிருக்கிறோம். எல்லாம் நம் சுயலாபத்திற்காகத்தான். மனித இனம் இதுவரை சநதிக்காத அளவு வெப்பம் உயர்ந்து கொண்டிருக்கிறது. தரைக்கு மேலே கரியுமிலவாயுவாக விடுகிறோம். பூமி சூடாகிறது. கார்பனை உண்டு உள்ளுக்கு இழுத்து ஒளிச்சேர்க்கை மூலம் தனக்கும், மற்ற உயிரினங்களுக்கும் உணவு தயாரிக்கும் மரங்களையும் வெட்டி சாய்த்துக் கொண்டிருக்கிறோம். கார்பன் இழுக்கப்படும் வழியன்றியும் புவியின் சூடு அதிகரிக்கிறது.

பூமியைவிட... கொதிக்கும் வெள்ளிகோள்...!

சூரிய குடும்பத்தின் முதல் பிள்ளை புதன், இரண்டாவது குழந்தை வெள்ளி, மூன்றாவது மகன்தான் பூமி. புதன் சூரிய மையத்திலிருந்து 5.7கோடி கி.மீ தூரத்தில் உள்ளது. வெள்ளி 10.8 கோடிகி.மீ தூரத்தில் உள்ளது. பூமி சுமார் 15 கோடி கி.மீ தூரத்தில் உள்ளது. ஆனால் வெள்ளியின் வளிமண்டல வெப்பம், புதனைவிட அதிகம் ஆம் புதனின் மேற்பரப்பு வெப்பம் 350சி வெள்ளியின் வெளிப்பரப்பு வளிமண்டல வெப்பம் 480சி பூமியின் சராசரி வெப்பம் 15சி மட்டும்தான். பூமி வெள்ளியைவிட 5கோடி கி.மீ தூரத்தில் இருப்பது என்ற காரணம் மட்டுமல்ல. முக்கியமாக வெள்ளியின் வளிமண்டலம் முழுவதும் கரியுமிலவாயுவின் புகைமண்டலமாக உள்ளது. வெப்பத்தின் மைய காரணி இதுவே. எனவேதான் வெள்ளிக்கோள், சூரியனுக்கு அருகில் இருக்கும் புதனைவிட வெப்பமாக உள்ளது. பூமியில் பெரும்பகுதி கார்பன்கள் நிலத்துக்கீழே ஹைட்ரோகார்பன் களாக பலவகை புதைபடிமங்களாக சேமிக்கப்பட்டிருக்கின்றன. இன்று அவற்றை எடுத்து எரிபொருளாக்கி கரியை வான்வெளியில் கச்கி, பூவியை சூடாக்கிறோம்.

மின்சக்தி உருவாக்க கார்பன் வெளியீடு....!

உலக வெப்பநிலை உயர்வுக்கு அதிக பொறுப்பு ஏற்கவேண்டியவர்கள் வளர்ந்த நாடுகளான அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய நாடுகளான ஸ்வீடன், நார்வே, பின்லாந்து போன்றவையும், ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் கனடாவும்தான். வளர்ந்து வரும் நாடுகளான இந்தியா, சீனா போன்றவையும்கூட பங்காளிகளாகின்றன. இவர்களின் வாழ்நிலைக்காக கூடுதலான மின்சக்தி, கட்டுமானப் பொருட்களான சிமெண்ட் தயாரிப்பு மற்றும் நெகிழி பயன்பாட்டால் வெப்பம் உயருகிறது. மின்உற்பத்தி என்பது பெரும்பாலும் கரியை எரித்தே வெப்பஉலை மூலமே உற்பத்தி ஆகிறது. வீடுகள், தொழிற்சாலைகள் உருவாக்க சிமெண்ட் தேவைப்படுகிறது. வெப்பம் உயருகிறது.

அதிக மின்பயன்பாடு உள்ள பணக்கார நாடுகள்!

உலகில் அதிக மின்சக்தியை விழுங்கி ஏப்பம் விடுவதில் ஐஸ்லாந்து, நார்வே, பின்லாந்து, கத்தார், கனடா, மற்றும் குவைத் போன்றவை முன்னிலை வகிக்கின்றன. இதில் அமெரிக்கா 9வது இடத்திலும், இந்தியா 160வது இடத்திலும் உள்ளன. மோட்டார் வாகன பயன்பாடு என்பது அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஐஸ்லாந்து, ஆஸ்திரேலியா, இத்தாலி, கனடா, ஜப்பான், ஸ்வீடன் மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் உலகளவில் அதிகம் உள்ளன. மின்உற்பத்தி என்பது கரிப்பொருள்களை எரித்தே உருவாக்கப்படுகின்றது.

மழைக்காடுகள் உயிரின் நுரையீரல்கள்.... !

காடுகள் அழிக்கப்படுவது உலக வெப்பமயமாதலின் முக்கிய காரணிகளுல் ஒன்றாகும். உலகில் வெளியேறும் பசுமை இல்ல வாயுக்களில் 20% என்பது வெப்பமண்டல காடுகள் அழிக்கப்படுவதால் உண்டாகிறது. வெப்ப மண்டல மழைக்காடுகளில் மரங்களும், தாவரங்களும், வளிமண்டலத்தின் கரியுமிலவாயுவை உட்கொண்டு, ஒளிச்சேர்க்கை மூலம் 25% ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கின்றன. எனவே, அமேசான் மழைக்காடுகள் உலகின் நுரையீரல்கள் என அழைக்கப்படுகின்றன.

உயிர்வளம் மிக்க மழைக்காடுகள்.... !

முன்பு உலகின் பரப்பில் 14% நிலப்பகுதி மழைக்காடுகளாக இருந்தது. இன்று மழைக்காடுகளின் அளவு 6%ஆக உள்ளது. மழைக்காடுகள் பிரேசில், வெனிசுலா, கொலம்பியா, கிழக்கு ஆன்டிஸ், ஈக்குவடார் மற்றும் பெரு போன்ற நாடுகளில் உள்ளன. அதன் ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பில், 750வகை தாவரங்கள் வாழ்கின்றன. உலகின் உணவு வகையில் 80% உணவுப் பொருட்கள் வெப்பமண்டல காடுகளில் விளைகின்றன. குறைந்தபட்சம் 3000 வகை பழங்கள் வெப்பமண்டல மழைக்காடுகள் மூலம் கிடைக்கின்றன. 125 வகை மருந்துகள் மழைக்காடுகளின் தாவரங்களிலிருந்தே தயாரிக்கப்படுகின்றன. 3000வகை தாவரங்களில் புற்றுநோய்க்கான மருந்துகள் இருப்பதாக ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவைகளில் 70% மழைக்காடுகளில் உள்ளன. குழந்தைகளின் இரத்தப்புற்று நோய்க்கான சிறந்த நிவாரணியான நித்திய கல்யாணி யின் தாயகமும் அமேசான் காடுகளே!

மழைக்காடு அழிவு.. வெப்பமயமாதல் உயிரின அழிவு...!

மழைக்காடுகள் 5கோடி மக்களின் தாயகமாக உள்ளது. உலகின் 80% ஏழைமக்களின் வாழ்க்கை மழைக்காடுகளைச் சார்ந்தே உள்ளது.வெப்ப மண்டல மழைக்காடுகளின் அழிப்பே,காலநிலை மாற்றத்திற்கும் ,புவி வெப்பமடைதலுக்கு முக்கிய காரணியாகும் மழைக்காடுகள் அழிக்கப்படுவாதல் வருடந்தேரும் 50,000 உயிரினங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன ஒவ்வொரு வினாடியும் ஒரு ஏக்கர்பரப்புள்ள மழைக்காடுகள் தாவரங்கள் விலங்குகள் மற்றும் பூச்சிகள் அழிந்து கொண்டிருக்கின்றன 90 ஆதிவாசி இனங்கள் அழிக்கப்பட்டுவிட்டன.

காடுஅழிவின்....வெப்பமயமாதலின் காரணி...

அமேசான் மழைக்காடுகள் 9000 கோடி டன் கரியமில வாயுவை எடுத்துக்கொள்கின்றன.ஆனால் ஒரு வருடத்தில் 3.4கோடி மரங்கள் வெட்டப்படுகின்றன.ஒருமரம் 1 டன் கரியுமில வாயுவை உட்கொள்ளும் தன்மையுடயது.ஒவ்வொருமரம் வெட்டும் போது 1டன் கரியமிலவாயு புவியின் வளிமண்டலத்தில் கலக்கிறது வானில் பறக்கும் விமானங்களும் வளிமண்டலத்தில் கரியைக் கக்கி வெப்பத்தை அதிகப்படுத்துகின்றன.விமானம் லண்டனிலிருந்து நியூயார்க் செல்லும் விமானம் ஒருமுறை பறந்தாலே சுமார் 300 டன் கரியுமிலவாயு வளிமண்டலத்தில் அதிகரிக்கிறது.பெரிய கார்கள், ஒர்ஆண்டில் 100 டன் கரியமில வாயவை வெளிவிடுகின்றன. கார்களையும் விமாணங்களையும் அதிகமின்சக்தியையும் கட்டிடங்களையும் யார் நண்கு பயன்படுத்துகின்றனர்.உலகின் 10 சதவிதம் பணக்கார சீமான்கள் மட்டுமே வானமே கூரையாய் படுத்திருக்கும் ஏழை விவசாயா,தொழியாளியா உழைப்பாளியா.. சுமைதூக்கும்... கூலித் தொழிலாளியா யார்... யார்... யார் காரணம்.. உலகம் சூடாகி கொதிப்பதற்கு....

நன்றி: பேரா.சோ.மோகனா

Saturday, February 27, 2010

கார்பன் டை ஆக்சைடை கைப்பற்ற........

புவிக்கோளம் வெப்பமடைவதைத் தடுத்து நிறுத்தும் ஒரு முயற்சி CCS என்றழைக்கப்படும் CARBON CAPTURE AND STORAGE தொழில்நுட்பம் ஆகும். எண்ணெய், கரி போன்ற படிம எரிபொருட்களை அதிக அளவில் எரிக்கும் தொழிலகங்களில் இருந்து வெளிப்படும் புவியின் வெப்பநிலை உயர்விற்கு காரணமான கார்பன் டை ஆக்சைடு வாயுவை சிறைபிடித்து, புவிக்கு அடியில் சேகரித்து வைக்கப்படும் தொழில் நுட்பமே CCS எனப்படும். உலகின் பல பகுதிகளில் CCS தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் தொழிலகங்கள் உள்ளன. CCS முறை முற்றிலும் பாதுகாப்பானது அல்ல. சிறைபிடித்த கார்பன் டை ஆக்சைடை கடல் நீருக்கடியில் சேமித்துவைப்பதால் கடல் நீரின் அமிலத்தன்மை கூடிப்போக வாய்ப்புண்டு.. நிலத்திற்கடியில் சேமித்து வைத்தால் வாயுக்கசிவினால் அது மீண்டும் வளிமண்டலத்தில் கலந்துவிட வாய்ப்பு உண்டு.

நாகரிகவாழ்க்கை என்னும் பெயரில் அளவிற்கு அதிகமான படிம எரிபொருட்களை பயன்படுத்திவரும் மனிதனின் இன்றைய நிலை பரிதாபகரமானது. கடப்பாரையை விழுங்கிய மனிதன் அதனை செரிக்கவைக்க சுக்கு கஷாயம் குடித்த கதைதான் இந்த முயற்சியெல்லாம். இருந்தாலும் அறிவியல் உலகம் சும்மா இருப்பதில்லை. வளிமண்டல கார்பன் டை ஆக்சைடு வாயுவை சிறைபிடித்து அடைத்துவைப்பதற்கான ஆய்வுகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அண்மையில் வெளியாகி உள்ள ஒரு ஆய்வு அறிக்கையில் நுண்ணியிரிகளைக் கொண்டு கார்பன் டை ஆக்சைடு வாயுவை சிறைபிடிக்க இயலும் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வகத்தில் இந்தக் கண்டுபிடிப்பு ஒரு தற்செயலாக நிகழ்ந்துள்ளது.

இதுபோன்ற சிக்கல்களை தீர்த்துவைக்க எப்போதும்போல் நமக்கு நுண்ணியிரிகளே துணை நிற்கின்றன. மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த J.A. டோஸல் என்னும் விஞ்ஞானியின் அறிக்கை இந்த நல்ல செய்தியை அறிவித்துள்ளது. மரபணு பொறியியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட நுண்ணியிரிகளைக் கொண்டு கார்பன் டை ஆக்சைடை கைப்பற்றும் பொருட்களை உருவாக்கமுடியும் என்கிறார் டோஸல்.

இந்த மூலக்கூறின் வடிவத்தை இவர் கணினியின் உதவியால் மாற்றியமைத்து ஆராய்ந்துள்ளார். இவருடைய ஆய்வின் பலனாக இந்த மூலக்கூறுகள் தொழிலகங்களில் கார்பன் டை ஆக்சைடு உறிஞ்சிகளாக பயன்படும் நாள் தொலைவில் இல்லை. இந்த ஆய்வின் மூலம் நுண்ணியிரின் செல்சவ்வுகளுக்குள் வளிமண்டல கார்பன் டை ஆக்சைடை சேமிக்கும் வழி கண்டறியப்பட்டுள்ளது.

Thursday, February 18, 2010

பூமி சூடாவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள்

பூமி சூடாவதைப் பற்றி உலகம் முழு வதும் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அண்மையில், கோபன்ஹேகனில் நடந்த மாநாடு, வளர்ந்த நாடுகளின்- குறிப்பாக அமெரிக்காவின்- பிடிவாதம் காரணமாக பசுங்குடில் வாயுக்கள் வெளியேற்றம் பற்றி தெளிவான இலக்குகள் நிர்ணயிக் கப்படாமலேயே முடிவடைந்தது. வளர்முக நாடுகள் ஒன்றுபட்டு அந்த நாடுகள் மீது நிர்ப்பந்தங்களைக் கொண்டுவந்தால் தான் பூமியும், மக்களும் தப்பிக்க முடியும் என்பது தெளிவு.


பூமி சூடாவதால் ஏற்படும் பல்வேறு பாதிப்புகள் குறித்து அறிவியல் கதிரில் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். மக்களு டைய உடல்நலத்திற்கு அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் நாம் அறிந்து கொள்ளவேண்டும்.


உலக சுகாதார நிறுவனம் செவ்வி றைச்சி (சநன அநயவ) புற்றுநோய் உருவாகக் காரணமாக இருப்பதால் அதை உட் கொள்ளுவதைக் குறைக்க வேண்டு மெனப் பரிந்துரைக்கிறது. “தொற்றுநோய் கள் பரவும்போது மட்டும் நாம் தடுப் பூசிகளைத் தேடி அங்குமிங்கும் ஓடு கிறோம். கடந்த 30 வருடங்களில் கிட்டத் தட்ட ஒவ்வோர் ஆண்டும் புதிய புதிய தொற்றுநோய்கள் ஏன் முளைக்கின் றன என்று நாம் யோசிப்பதில்லை. தொற்றுநோய்களில் 60 சதத்திற்கும் மேல் விலங்கினங்களிடமிருந்தே தோன்று கின்றன. பெரிய மிருகங்களை மோச மான சூழ்நிலைகளில் அடைத்து வைப்ப தால் அவை நோயை உருவாக்கும் நுண்ணுயிர்களைப் பரப்புகின்றன. அவற்றின் உணவுத்தேவைக்காக காடு களும் தாவரங்களும் அழிபடுகின்றன. இதன் காரணமாக உணவுப் பாதுகாப் பின்மை, புற்றுநோய், இதய நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே, கால்நடைகளின் எண்ணிக்கை யைக் குறைக்க வேண்டிய தேவை ஏற் பட்டிருக்கிறது” என்கிறார் இந்திய பொது சுகாதார அமைப்பின் தலைவர் கே. ஸ்ரீநாத் ரெட்டி.


“பருவநிலை மாற்றம் காரணமாக கடலோரப் பகுதிகள் அதிக பாதிப்புக்குள் ளாகும். கடல் நீர்மட்டம் உயர்வதன் காரணமாக குடிநீரின் உப்புத்தன்மை அதிகரிப்பதால் இதயக் கோளாறுகளும், இரத்த அழுத்தமும் அதிகரிக்கும். நோயை உருவாக்கும் பூச்சி இனங்கள் பெருகவும் சூடேறும் பூமி வழிவகுக்கும்” என எச்சரிக்கிறார்கள் உடல்நல வல் லுநர்கள்.

Monday, March 2, 2009

காலநிலை மாற்ற பேச்சுவார்த்தைகள் - தர்மசங்கடமான உண்மைகள் சமரசங்கள் தீர்வைத் தருமா?

aligore காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான உலகின் முதல் சர்வதேச உடன்படிக்கையான கியோட்டோ உடன்படிக்கை 2009 உடன் காலாவதி ஆகும் நிலையில், புதிய உடன்படிக்கை எப்படி அமைய வேண்டும் என்பதற்கான பேச்சுவார்த்தை இந்தோனேசியத் தீவான பாலியில் கடந்த டிசம்பர் மாதம் நடந்து முடிந்துள்ள நிலையில் நாம் இருக்கிறோம். கோபன்ஹேகனில் 2009ம் ஆண்டு நடைபெறும் மாநாட்டில் புதிய உடன்படிக்கை இறுதி செய்யப்படும்.

இந்த நிலையில் பாலி பேச்சுவார்த்தைகள் வெற்றி பெற்றதாக இந்திய பிரதிநிதிகளும், வளரும் நாட்டு பிரதிநிதிகள் சிலரும் தெரிவிக்கின்றனர். இது எந்த அளவு உண்மை?

காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துவதற்கான சர்வதேச கூட்டு முயற்சிகளை ஒருங்கிணைக்க ஐ.நா. காலநிலை மாற்ற பணித்திட்ட பேரவை 1990ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளுக்கு இடையே பொதுவான அதேநேரம் வேறுபட்ட பொறுப்புகள் இருக்க வேண்டும் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஆனால் இந்த நோக்கத்தை அடைவதில் அமெரிக்கா, கூட்டாளி நாடுகள் எப்பொழுதுமே தடையாக நிற்கின்றன. நோபல் பரிசு பெற்ற அமெரிக்க முன்னாள் துணை அதிபர் அல் கோர் கியோட்டோ உடன்படிக்கை அமெரிக்க பிரதிநிதிகள் குழுவுக்கு தலைமை வகித்துச் சென்றபோதிலும் மாற்றங்கள் ஏற்படவில்லை.

கியோட்டோ உடன்படிக்கையில் கையெழுத்திடாதது மட்டுமின்றி, வாயு வெளியீட்டு கட்டுப்பாடுகளை அமெரிக்கா எந்தக் காலத்திலும் ஏற்கவில்லை. பாலி பேச்சுவார்த்தையிலும் அதுதான் நடந்தது. வளரும் நாடுகளுக்கு வரையறுக்கப்பட்ட எந்தக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. இது பற்றிய கருத்து பாலி தீவு வரைவு அறிக்கையில் இடம்பெற்ற போதும், இறுதி அறிக்கையில் அது ஒரு அடிக்குறிப்பாக மட்டுமே இடம்பெற்றுள்ளது. கட்டுப்பாடுகள் புறந்தள்ளப்பட்டுவிட்டன.

கியோட்டோ உடன்படிக்கையை ஏற்க மறுத்த அமெரிக்கா, இந்தியா, சீனா, பிரேசில், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட வளரும் நாடுகள் அளவிடத்தக்க கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அப்பொழுது வலியுறுத்தியது. பாலி பேச்சுவார்த்தையிலும் அமெரிக்க இதையே வலியுறுத்தியது. கடைசியாக, மட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் வளரும் நாடுகள் பங்கேற்கும், அது அளவிடத்தக்கதாக அமையத் தேவையில்லை என்று இந்தியா வலியுறுத்திய கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

உலகை கடுமையாக மாசுபடுத்தி வரும் வளரும் நாடுகள், மட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் நேரடியாகப் பங்கேற்கத் தயாராக இல்லை. மாறாக, வளரும் நாடுகளில் மக்கள்தொகை அதிகமாக இருப்பதை போலிக் காரணமாகக் கூறி வருகின்றன. வளரும் நாடுகளின் மீது காலனி ஆதிக்கம் செலுத்தி இயற்கை வளங்களைச் சுரண்டி தங்களை வளர்த்துக் கொண்ட மேற்கு நாடுகள், 21ம் நூற்றாண்டிலும் அதைத் தொடர முயற்சிக்கின்றன.

பாலித் தீவு பேச்சுவார்த்தையும் அதையே பிரதிபலிக்கிறது. வளரும் நாடுகளின் பிடிவாதத்தால் கடந்த 17 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை தொடக்கப்புள்ளியில் நிற்பது போலவே தெரிகிறது. வளரும் நாடுகளின் இந்த ஆதிக்க உணர்வை ஜி 77 கூட்டமைப்பு என்ற குடையின் கீழ் இணைந்து வளரும் நாடுகள் எதிர்க்க வேண்டும்.

ஆனால் அமெரிக்க பிடிவாதத்தால் தெளிவான வரையறைகளை உருவாக்காமலேயே பாலி பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது. இதை வெற்றி என்று கூறத் தோன்றவில்லை.

காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துவதில் வரையறுக்கப்பட்ட கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொள்ள அமெரிக்கா எல்லா காலமும் மறுத்து வருகிறது. இந்தியாவும் அந்த வழியையே பின்பற்றுகிறது. அதைத்தான் பாலி பேச்சுவார்த்தையிலும் இந்தியா வலியுறுத்தியுள்ளது. பேச்சுவார்த்தையின் முடிவுகள் அதையட்டியே அமைந்துள்ளன. இதை வெற்றி என்று கூற முடியுமா?

காலநிலை மாற்றம் தீவிரமடைந்து வருகிறது. ஆனால் அதை மட்டுப்படுத்த வரையறுக்கப்பட்ட நடவடிக்கைகள் தேவையில்லை. இயன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால் போதும் என்பது உயிர் போகத்தான் போகிறது, மெதுவாக சிகிச்சை செய்து கொள்ளலாம் என்று கூறுவது போல இருக்கிறது.

இதுபோன்ற நமது மனப்பான்மைகள் மாறவேண்டும். காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படப் போவது இந்தியா போன்ற வளரும் நாடுகள்தான். அதிலும் குறிப்பாக ஏழைகள், ஒடுக்கப்பட்டோர்தான் அதிகமும் பாதிப்பைச் சந்திப்பர். ஏற்கெனவே பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகிவரும் விளிம்புநிலையில் உள்ளோர், சுற்றுச்சூழல் ரீதியிலும் ஒடுக்கப்படுகின்றனர். இது பற்றி சொல்லாடலை உருவாக்கி, அரசுக்கு நெருக்கடியை ஏற்படுதத வேண்டும்.

(1992 ரியோடிஜெனிரோவில் நடைபெற்ற ரியோ பூமி மாநாடு என்றழைக்கப்பட்ட மாநாட்டில் ஐ.நா. காலநிலை மாற்ற பணித்திட்டப் பேரவை உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 1997ம் ஆண்டு கியோட்டோ உடன்படிக்கை உருவானது.)

இ.பி.டபிள்யு.

காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்த உடனடியாகச் செயல்பட வேண்டும் என்று கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஐ.பி.சி.சி. நான்காவது மதிப்பீட்டு அறிக்கை எச்சரிக்கிறது. ஆனால் அதற்குப் பிறகு கூட்டப்பட்ட பாலி பேச்சுவார்த்தை 'எதைப் பற்றியும் கவலைப்படாத தன்மை'யையே வெளிப்படுத்துகிறது. ஐ.நா. காலநிலை மாற்ற பணித்திட்ட பேரவையின் 'வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளிடையே பொதுவான அதேநேரம் வேறுபட்ட பொறுப்புகளை ஏற்றுக் கொள்வது' என்ற அடிப்படைக் கொள்கை விட்டுக்கொடுக்கப்படவில்லை. காலநிலை மாற்ற மட்டுப்படுத்தும் சர்வதேச பேச்சுவார்த்தையில் கடந்த முறையைப் போல அமெரிக்கா விலகவில்லை.

ஆனால் இந்தியா இன்னமும் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளத் தயாராகவில்லை. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் வரலாற்று ரீதியிலும், நடப்பு ரீதியிலும் வளரும் நாடுகளுக்கு அதிக பொறுப்பு உள்ளது என்பது உண்மையே. சர்வதேச பேச்சுவார்த்தைகளில் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள் இதை வலியுறுத்த வேண்டும். ஆனால் அதேநேரம் மட்டுப்படுத்தும் முயற்சிகளில் வளரும் நாடுகள் நடவடிக்கை எடுக்கட்டும், பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற மனப்பான்மை பயன்தராது.

காலநிலை மாற்றம் 'பாயத் தயாராக இருக்கும் பிசாசைப் போன்றது'. தூண்டிவிடப்பட்ட பிறகு அதன் செயல்பாடுகளை கட்டுப்படுத்த முடியாது. எனவே, இந்தியாவும் மட்டுப்படுத்தும் முயற்சியில் அளவிடத்தக்க மேற்கொள்ள வேண்டும். இதற்காக தேசிய அளவில் கொள்கை மாற்றங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதுடன், அவற்றை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச பேச்சுவார்த்தைகளில் தன் இடத்தை தெளிவுபடுத்த வேண்டும்.

காலநிலை மாற்றம் முக்கியத்துவம்

ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கெல் காலநிலை மாற்றத்துக்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வருகின்றனர். இவ்வளவு காலம் கியோட்டோ உடன்படிக்கையில் கையெழுத்திடாமல் இருந்து வந்த ஆஸ்திரேலியாவில், ஆட்சி மாற்றத்தை நிர்ணயிப்பதாக காலநிலை மாற்றப் பிரச்சினை உருவாகியுள்ளது.

அமெரிக்கா முன்னாள் அதிபர் அல் கோர், காலநிலை மாற்ற பன்னாட்டு அரசுகள் குழுவுக்காக அதன் தலைவர் ராஜேந்திர குமார் பச்சௌரி ஆகியோர் நோபல் அமைதிப் பரிசு பெற்றுள்ளனர்.

கியோட்டோ உடன்படிக்கை தொடர்பான விவாதத்தின்போது, அமெரிக்க வாழ்க்கை முறையை எதற்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது என்று அமெரிக்கா தெரிவித்தது. குளிரை எதிர்க்க அதிக புதைபடிம எரிபொருள் தேவை என்கிறது கனடா. பொருளாதார வளத்துக்கு எண்ணெய் ஏற்றுமதியை மட்டுமே சார்ந்திருப்பதால், கச்சா எண்ணெய்க்கு வரி விதித்து கட்டுப்படுத்தக் கூடாது என்கிறது சவுதி அரேபியா. தனித்தனியாகப் பார்க்கும்போது இந்த அக்கறைகள் சரியானவை போலத் தோன்றலாம். ஆனால் காலநிலை மாற்றத்தைப் பொருத்தவரை இவையெல்லாம் பயங்கர எதிர்விளைவுகளை உருவாக்கக் கூடியவை. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள உடனடியாக மட்டுப்படுத்தும் முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று ஐரோப்பிய கூட்டமைப்பு, தென்னாப்பிரிக்கா, சீனா போன்றவை வலியுறுத்துகின்றன.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் புதிய சர்வதேச உடன்படிக்கையை உருவாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் ஆக்கப்பூர்வமான பங்கேற்பை இந்தியா உறுதி செய்ய வேண்டும். அதற்கு இப்பிரச்சினை குறித்து நாட்டில் விரிவான பொது விவாதம் நடத்தப்பட வேண்டும். புவி அதிவிரைவாக வெப்பமடைந்து வரும் நிலையில், அதன் எதிர்விளைவுகளை எதிர்கொள்ள ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை மட்டும் பெரும் பயன் தராது. அளவிடத்தக்க மாற்றங்களை இந்தியா ஏற்படுத்த வேண்டிய நேரம் வந்தாகிவிட்டது.

டவுன் டு எர்த்

வளரும் நாடுகளின் சுயநல முகம் மீண்டும் பாலியில் வெளிப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் 1990களில் தொடங்கி தற்போது வரை நீண்டாலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் உடன்படிக்கைகள் எதுவும் கையெழுத்தாகவில்லை. எல்லாம் தொடக்கப்புள்ளியிலேயே நிற்கிறது. இந்தக் காலத்தில் பசுமையில்ல வாயு வெளியீடு அதிகரித்திருக்கிறது. காலநிலை மாற்றம் விளைவுகள் பயங்கர நிலையை எட்டி வருகின்றன. உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இந்தப் பேரழிவை தடுக்க முடியாது.

இவ்வளவுக்கும் பாலி பேச்சுவார்த்தை சர்வதேச உடன்படிக்கையை தொடங்குவதற்கான பேச்சுவார்த்தை மட்டுமே, அந்தப் பேச்சுவார்த்தையிலும் அமெரிக்கா தன் பிடிவாதத்தை அரங்கேற்றியுள்ளது.

கார்பன் டை ஆக்சைடு வெளியீடு எப்பொழுது உச்சத்தை அடையும், எப்பொழுது சரியத் தொடங்கும் என்பதற்கான கால வரையறையை நிர்ணயிக்க இந்த ஒப்பந்தம் தவறிவிட்டது. கார்பன் டைஆக்சைடு வெளியீட்டை மட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படும், குறிப்பிட்ட காலத்துக்குள் இந்த அளவு பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டாயம் இந்த பேச்சுவார்த்தையில் இறுதி செய்யப்படவில்லை. பணக்கார அல்லது கார்பன் கடன் நாடுகள் பசுமையில்ல வாயு வெளியீட்டு கட்டுப்பாட்டு இலக்குகளை சர்வதேச பேச்சுவார்த்தைகள் மூலம் கண்டடைவது. சட்டத்துக்கு கட்டுப்பட்ட, தண்டனை விதிக்கத்தக்கதாக இருக்க வேண்டும் என்று பேச்சுவார்த்தைகளின் தொடக்கத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது

இதற்கு சர்வதேச உடன்படிக்கைகள் மூலம், கட்டுப்பாட்டு இலக்குகள் நிர்ணயித்து, வாழ்க்கை முறையில் அளவிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதே உலக நாடுகளின் விருப்பம். ஆனால், தொடக்கத்தில் இருந்தே அமெரிக்கா இதை ஏற்றுக் கொள்ளவில்லை. 30 கோடி மக்கள்தொகையைக் கொண்டுள்ள அமெரிக்கா வரலாற்று ரீதியிலும், நடப்பிலும் 25 சதவிகித பசுமையில்ல வாயுக்களை வெளியிட்டு வருகிறது. காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்தும் முதல் சர்வதேச உடன்படிக்கையான கியோட்டோ உடன்படிக்கையில் கையெழுத்திடாமல் வெளியேறியது. எல்லா காலமும் தன்னார்வ நடவடிக்கைகள் எடுத்தால்போதும், காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்தலாம் என்று வலியுறுத்தி வருகிறது. அந்த அம்சம் பாலி பேச்சுவார்த்தையிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

வளரும் நாடுகளை அடக்க அமெரிக்கா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. காலநிலை மாற்றப் பேச்சுவார்த்தையிலும் இதே ஆதிக்க போக்கை அமெரிக்கா நீட்டிக்க முயற்சித்து வருகிறது. ஆனால் வளரும் நாடுகள் இதை இணைந்து எதிர்க்க வேண்டும்.

கியோட்டோ உடன்படிக்கையில் விதிக்கப்பட்ட கட்டாய கட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை. அதனால் அதுபோன்ற கட்டுப்பாடுகள் தேவையில்லை. பணக்கார நாடுகளை எதிர்ப்பது கடினம் என்று வளரும் நாடுகளும் கூறுவது ஆக்கப்பூர்வமான நடைமுறை அல்ல. இதுபோன்ற சமரசம் அமெரிக்காவுக்கே நன்மை பயக்கும். உலகுக்கு தீமை பயக்கும்.

பாலி பேச்சுவார்த்தைகளின் இறுதிக் கட்டத்தில் வளரும் நாடுகள் மீது சுமத்தப்பட்ட கட்டுப்பாடு என்னவென்றால், அளவிடத்தக்க, அறிவிக்கத்தக்க, பரிசோதனை செய்யத்தக்க மட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதாவது, வளரும் நாடுகள் கார்பன் டைஆக்சைடை மட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பங்கேற்க வேண்டும் என்று வளர்ந்த நாடுகள் வலியுறுத்தின. இந்தியாவின் வலியுறுத்தலை அடுத்து உகந்த மட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை வளரும் நாடுகள் எடுக்கும் என்று பாலி பேச்சுவார்த்தையில் ஒப்புக் கொள்ளப்பட்டது.
நன்றி: ஆதி