Showing posts with label அறிவியல் விஞ்ஞானியின் வரலாறு. Show all posts
Showing posts with label அறிவியல் விஞ்ஞானியின் வரலாறு. Show all posts

Tuesday, April 13, 2010

அலெக்சாண்டர் ஃப்ளமிங்


உலகம் அறிந்துள்ள மருத்துவ முன்னேற்றங்களுள் பெனிஸிலின் கண்டுபிடிப்பு தனிச்சிறப்பு வாய்ந்தது. பெனிஸிலின் காலத்திற்கு முன் பிரசவத்தில் பெண்கள் இறப்பதும், பிறந்தபின் குழந்தைகள் இறப்பதும் சர்வ சாதாரணம். லேசான சிராய்ப்புகளும் கீறல்களும் கூட மரணத்திற்கு இட்டுச் சென்றன. ஒரு நுண்ணுயிரை வைத்து இன்னொன்றைக் கொல்லமுடிகிற பெனிஸிலின் போன்ற நச்சுமுறி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் பல நோய்களிலிருந்து மனிதர்களைக் காப்பாற்ற முடிந்தது. பெனிஸிலினைக் கண்டு பிடித்து நவீன நச்சுமுறி மருந்துகள் யுகத்தைத் தொடங்கிவைத்த பெருமைக்குரிய விஞ்ஞானிதான் அலெக் ஸாண்டர் ஃப்பௌமிங். பெனிஸிலின் உலகெங்கிலும் உள்ள 20 கோடி மக்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளது என்கிறது ஒரு மதிப்பீடு.

ஃப்ளெமிங் 1881 ஆகஸ்ட் 6 அன்று ஸ்காட்லாந்து நாட்டில் பிறந்தவர். அவரது இளமைக்கல்வி இயற்கையெழில் சூழ்ந்த மலைப்பகுதியில் அமைந்தது. அங்குதான் இயற்கையை ரசிக்கவும், எதையும் கூர்ந்து நோக்கி அறியவும் அவர் பயிற்சி பெற்றார். பின்னாளில் அவர் பெனிஸிலின் என்ற அற்புத மருந்தைக் கண்டுபிடிக்க இப்பயிற்சியே உதவி செய்தது.

பாலிடெக்னிக் படிப்பை முடித்தபிறகு 16 வயதிலேயே கப்பல் நிறுவனம் ஒன்றில் அவர் அலுவலராகச் சேர்ந்தார். எழுத்தர் பணி அவருக்கு மனநிறைவை அளிக்கவில்லை. தூரத்து உறவினர் ஒருவரிடமிருந்து கிடைத்த சொத்து, அவர் மிகத் தாமதமாக 20 வயதில் மருத்துவக் கல்லூரியில் சேர வழி செய்தது.

நோய்க்கிருமிகளுக்கு எதிரான போர்

படிப்பை முடித்த பிறகு, நோய்க்கிருமிகளுக்கெதிரான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஆல்ம்நாத் ரைட் என்பவரிடம் உதவியாளராகச் சேர்ந்தார் ஃப்ளெமிங். ஜெர்மன் விஞ்ஞானி பால் என்ரிக் என்பவர் ‘சிஃபிலிஸ்’ என்ற கொடிய பால்வினை நோய்க்கு ‘ஸல்வார்ஸன்’ என்ற மருந்தைக் கண்டுபிடித்திருந்தார். ரத்தத்தைப் பரிசோதித்து அந்த நோயை எளிதில் கண்டறியும் ஒரு மேம்பட்ட முறையை ஃப்ளெமிங் அறிமுகப்படுத்தினார்.

நான்கு ஆண்டுகள் நடந்த முதல் உலகப்போரில் ரைட் குழுவினரின் தடுப்பூசி மட்டும் பயன்படுத்தப்பட்டிரா விட்டால், ஆயிரக்கணக்கானோர் டைஃபாய்டு காய்ச்சலுக்கு பலியாகியிருப்பார்கள். போரில் காயமடைந்த வீரர்களுக்கு கார்பாலிக் அமிலம், போரிக் அமிலம், ஹைட்ரஜன் பெராக்ஸைட் போன்ற நச்சுமுறி மருந்துகளையே அக்காலத்தில் பயன்படுத்தி வந்தனர். இந்த மருந்துகள் சிகிச்சைக்கு உதவாததோடு, இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அழித்து மேலும் பலர் இறப்பதற்கே வழிவகுத்தன என்று ஃப்ளெமிங்க் நிரூபித்தார். குறைபாடற்ற நச்சுமுறி மருந்தைக் கண்டுபிடிப்பதில் அவர் கவனம் திரும்பியது.

பல்வேறு வகை நுண்ணுயிர்களை தட்டுகளில் வளர்த்து அவற்றின் இயக்கங்களை அவர் ஆராயத் தொடங்கினார். தனது மூக்கிலிருந்து ஒழுகிய நீரிலிருந்தே ஓரிரு சொட்டுகள் எடுத்து பாக்டீரியாக்கள் அடங்கிய தட்டில் வைத்து வளர்த்தபோது, சளித்திரவத்தைச் சுற்றியிருந்த பாக்டீரியாக்கள் மட்டும் அழிக்கப்பட்டிருந்ததைப் பார்த்தார். இதேபோல் கண்ணீர், உமிழ் நீர், சீழ் போன்ற உடலில் சுரக்கும் பல திரவங்களை எடுத்து ஆராய்ச்சிக்கு உட்படுத்தினார். இந்த திரவங்கள் அனைத்திற்கும் நோய்க்கிருமிகளை வளராது தடுக்கும் ஆற்றல் இருப்பதைக் கண்டார். இயற்கையிலேயே அமைந்த இந்த நச்சு முறிபொருளுக்கு ‘லைசோஸைம்’ எனப் பெயரிட்டார்.

காளானிலிருந்து பெனிஸிலின்

1928ஆம் ஆண்டில் நுண்ணுயிர்கள் வளர்க்கப்பட்ட ஒரு தட்டை நோக்கிய போது, லைசோஸைம் அதுவரை செய்திராத ஒரு செயலை காளான் செய்திருந்ததைத் தற்செயலாகக் கண்டார். கொப்புளங்கள், கட்டிகள், மூக்கு, தொண்டை, தோல் இவற்றில் ஏற்படும் தொற்றுநோய்களை வரவழைக்கும் ஸ்டாபைலொகாக்கி எனப்படும் கிருமிகளை காளான் அழித்திருந்தது. அது மட்டுமல்ல, அந்தக் காளானின் சாரம் வெள்ளை அணுக்களை அழிக்கவில்லை என்றும் வேறு திசுக்களைப் பாதிக்கவில்லை என்றும் சோதித்துத் தெரிந்து கொண்டார். காளானில் பரவிய அப்பொருளுக்கு ‘பெனிஸிலின்’ எனப் பெயரிட்டார் ஃப்ளெமிங். ஆனால் பெனிஸிலினைப் பெரிய அளவில் அப்போது உற்பத்தி செய்ய இயலவில்லை. ஹோவர்டு ஃப்ளோரே, எர்னஸ்ட் செயின் ஆகியோர் அடங்கிய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகக் குழுவினர் 14 ஆண்டுகள் கழித்து அதைச் சாதித்தனர். பெனிஸிலின் ஒவ்வாமை உடையவர்களுக்கு வேறு பாதுகாப்பான நச்சுக்கொல்லி மருந்துகளைக் கண்டுபிடிப்பதிலும் அக்குழுவினர் வெற்றியடைந்தனர்.

1945ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங், ஹோவர்டு ஃப்ளோரே, எர்னஸ்ட் செயின் ஆகிய மூவருக்கும் மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

Thursday, April 8, 2010

ஹைபேஷா - வரலாற்றில் மறைக்கப்பட்ட அறிவுச்சுடர்

(மானுடம் இன்று அடைந்திருக்கும் சிந்தனை, தொழில்நுட்ப வளர்ச்சியானது ஆண்களால் மட்டும் சாதிக்கப்பட்டதல்ல. சரிபாதியான பெண்களுக்கும் சரிபாதிப் பங்குண்டு. அறிவுத்துறையில் பெண்களின் பங்களிப்பு தொடர்ந்து மறைக்கப்பட்டு வருகிறது. அதற்கு ஒரு உதாரணம் தான் ‘ஹைபேஷா’வின் வாழ்க்கை)

ஹைபேஷா - தத்துவ வானில் மின்னும் தாரகை

ஹைபேஷா

வரலாறு நெடுகிலும் வீராங்கனைகளாக, கவிஞர்களாக, கலை வித்தகர்களாக, சேவை செய்பவர்களாக, அழகிகளாக வாழ்ந்த பல பெண்களை நம்மால் காணமுடியும். ஆனால், பல்துறை அறிவோடு தத்துவம் என்னும் அறிவாயுதத்தோடு வாழ்ந்து வரலாற்றில் என்றும் ஒளி வீசிக்கொண்டிருக்கும் தாரகைகள் வெகு சிலரே.

அப்படியிருக்கையில், 'தான் வாழ்ந்த காலத்தில் தத்துவம், இலக்கியம், அறிவியல் ஆகிய துறைகளில் தனது சமகால அறிஞர்கள் அனைவரையும்விட தலைசிறந்தவராக இருந்தார் ஹைபேஷா' என்ற 'பெண்' என்று 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வரலாற்றாசிரியர் சாக்ரடீஸ் ஸ்கோலாஸ்டிகஸ் குறிப்பிடுவதைக் காணும்போது வியப்படையாமல் இருக்க முடியாது.

பண்டைய எகிப்து நாட்டின் புகழ்பெற்ற நகரமான அலெக்ஸாண்ட்ரியாவின் கிரேக்க தத்துவப் பள்ளியின் தலைவர்; தான் வாழ்ந்த காலத்தின் தலைசிறந்த கணித அறிஞர்; கிரேக்க பகுத்தறிவு பாரம்பரியத்தின் கடைசி வாரிசு; வானியல் அறிஞர்; பாய்ம பொருள்களின் (fluids) ஒப்பீட்டு அடர்த்தியை கண்டறியும் 'ஹைட்ரோமீட்டர்’ மற்றும் நட்சத்திரங்களின் நிலையை அறிய உதவும் ‘ஆஸ்ட்ரோலாப்’ ஆகிய கருவிகளை கண்டுபிடித்த விஞ்ஞானி; யூக்ளிட், டாலமி, டையோஃபாந்தஸ், அப்போலோனியஸ் ஆகிய கணித மேதைகளின் நூல்களை ஆராய்ந்து, சீர்த்திருத்தி விளக்க உரைகள் எழுதி உலகறிய செய்தவர்; பல தத்துவ, அறிவியல், கணித நூல்களை எழுதி தானே ஒரு பல்கலைக்கழகமாகத் திகழ்ந்தவர் என பல சிறப்புகளுக்குரியவரான ஹைபேஷாக்கு இணையான பெண்கள் வரலாறில் எவருமிலர்.

'ஹைபேஷா (Hypatia)’ பிறந்த ஆண்டு துல்லியமாகத் தெரியவில்லை என்றாலும் கி.பி.350க்கும் கி.பி.370க்கும் இடையில் என்பது உறுதி. தத்துவ அறிஞரான தனது தந்தை தியோனால் கல்வியூட்டப்பட்டு, பின்னர் கிரேக்கம், இத்தாலி, மத்தியதரைக்கடல் நாடுகளுக்குச் சென்று கல்விகற்று அலெக்ஸாண்டிரியா திரும்பினார் ஹைபேஷா. ‘மியூஸியம்’ என்று அழைக்கப்பட்ட உலகின் முதல் அறிவியல் ஆராய்ச்சிக்கூடம் மற்றும் நூலகம் இணைந்த கல்விச்சாலையில் பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற கிரேக்க அறிஞர்களின் தத்துவத்தைக் கற்பித்தும் கணிதவியல் ஆராய்ச்சிகளை செய்தும் வந்தார் ஹைபேஷா. அவரது அறிவாற்றலைக் கேள்வியுற்று, அவரிடம் பயில்வதற்காக உலகெங்கிலிருந்தும் போட்டிப்போடுக்கொண்டு வந்தனர் மாணவர்கள்.

புதுமைப் பெண்ணான ஹைபேஷா, அன்றைய பெண்கள் வழக்கமாக அணியும் ஆடையை அணிபவரல்ல. மாறாக அன்றைய அறிஞர்கள், ஆசிரியர்கள் அணியும் ஆடைகளையே அணிந்தார். ஆண் தேரோட்டித் துணையின்றி தன்னுடையத் தேரை தனியாக ஓட்டிக்கொண்டு நகரெங்கும் வலம் வருவார். மேலும் அன்றைய அலெக்ஸாண்டிரியா நகரின் அரசியல் செல்வாக்கு மிகுந்தவராக மக்களால் மதிக்கப்பட்டார்.

தத்துவ ஆய்வோடு கணிதவியலில் அவர் ஆற்றியப் பங்கு அளவிடற்கரியது. புரியாத வகையில் இருந்த யூக்ளிட் எழுதிய ‘எலிமெண்ட்ஸ்’, டாலமியின் ’அல்மாஜெஸ்ட்’ போன்ற பண்டைய கணித நூல்கள் பலவற்றை ஆராய்ந்து, எளிமைப்படுத்தி விரிவுரைகள் எழுதினார். ஐரோப்பிய வரலாறின் இருண்ட காலத்தில் மறைந்த ஹைபேஷாவின் கணித நூல்கள் 8ஆம் நூற்றாண்டில் அரபியில் மொழிபெயர்க்கப்பட்டது. பின்னர் மறுமலர்ச்சி காலத்தில் ஹைபேஷா இறந்து எண்ணூறு ஆண்டுகளுக்குப்பின் லத்தீன் மொழியில் வெளியானது. இந்த நூல்களே பிற்காலத்தில் நியூட்டன், லீப்னிட்ஸ், டெக்கார்டே போன்ற அறிஞர்களின் கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படியாக இருந்தன. ஹைபேஷா உலகைவிட்டு மறைந்து 15 நூற்றாண்டுகள் ஆனபின்னும் நவீன அறிவியலுக்கு பங்களித்துக் கொண்டிருக்கிறார்.

21ஆம் நூற்றாண்டிலேயே பெண்கள் சம உரிமை கிடைக்காமல் போராடி கொண்டிருக்கும்போது, மேலே சொல்லப்பட்ட அவ்வளவு சிறப்புகளுடன் 4ஆம் நூற்றண்டில் ஒரு பெண் வாழ்ந்தால் ஆணாதிக்க சமூகம் அவளை விட்டுவைத்திருக்குமா? அல்லது மதபீடங்கள் தான் சும்மா இருந்திருக்குமா?

வரலாறிலே கி.பி. நான்காம் நூற்றாண்டு என்பது கொந்தளிப்பு மிகுந்ததாக இருந்தது. கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக்கொண்ட ரோமானிய பேரரசில் மத குருக்களின் செல்வாக்கு அச்சுறுத்தும் அளவுக்கு வளர்ந்திருந்தது. பகுத்தறிவு புறக்கணிக்கப்பட்டு மத நம்பிக்கையே எங்கும் பரப்பப்பட்டது, பெண்களின் நிலை தாழ்ந்தது. கிறிஸ்தவரல்லாத வேற்று மதத்தினரும் அறிஞர்களும் கொடுமைப்படுத்தப்பட்டனர்,அவர்களின் ஆலயங்கள் இடிக்கப்பட்டன. எதிர்ப்பவர்கள் வேட்டையாடப்பட்டனர்.

எனினும் அப்போது எகிப்தின் ஆளுநராக இருந்தவர் ஒரிஸ்டஸ் என்னும் கிறிஸ்தவரல்லாதவர், ஹைபேஷாவின் நண்பராக இருந்தார். கி.பி.412ல் பிஷப் ஸைரில் என்பவன் அலெக்ஸாண்டிரியாவின் தலைமை கிறிஸ்தவ மதகுருவாக நியமிக்கப்பட்டான். அறிவாராய்ச்சியும், தத்துவமும், மத சகிப்புத்தன்மையும் மிகுந்திருந்த அந்த நகரை மதவெறியில் மூழ்கடிக்க ஆரம்பித்தான் அவன். ஸைரிலின் சதியால் பதவியிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட ஒரிஸ்டஸ் கிறிஸ்தவ துறவிகளால் அடித்துக்கொல்லப்பட்டார். அப்படியும் ஸைரில்லின் வெறி அடங்கவில்லை. ஹைபேஷா என்னும் பெண் அங்கு செல்வாக்கோடு வலம் வருவது மதவாதிகளுக்கு பிடிக்கவில்லை.

கி.பி.415ல் அலெக்ஸாண்டிரியா நகரில் தனது வழக்கமானப் பணிகளை முடித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தபோது ஹைபேஷாவின் தேர் வழிமறிக்கப்பட்டது. பீட்டர் என்னும் மதகுருவின் தலைமையில் வந்த கிறிஸ்தவ மதவெறிக்கூட்டம் ஹைபேஷ்யாவை கீழே இழுத்துப்போட்டது. வீதிகளில் தரதரவென அவரை இழுத்துச்சென்றனர். சீசேரியம் என்னும் கிறிஸ்தவ ஆலயத்துக்குள் கொண்டுச்சென்று ஹைபேஷாவின் ஆடைகளைக் கிழித்து நிர்வாணமாக்கினர். ஹைபேஷா கதற கதற சிப்பிகளாலும் ஓடுகளாலும் அவரது உடலைக்கீறி சதையைப் பிய்த்தெறிந்தனர். குற்றுயிராக கிடந்த ஹைபேஷாவின் கைகால்கள் துண்டிக்கப்பட்டு சினாரன் என்னும் இடத்தில் வைத்து எரிக்கப்பட்டது.

மதவெறியின் கொலைவெறிக்கு பலியானார் ஹைபேஷா. அப்போது வைக்கப்பட்ட தீ ஹைபேஷாவின் உடலுக்கு மட்டுமல்ல அறிவுக்கும்தான். ஆம், ஹைபேஷாவின் மறைவுக்குப்பிறகு ஐரோப்பிய கண்டத்தைச் சூழ்ந்த இருள் விலகுவதற்கு மேலும் ஆயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டது. ஈவு இரக்கமற்ற மதவெறியர்களால் ஹைபேஷாவின் உடலைத்தான் அழிக்க முடிந்தது. ஆனால், அவரின் புகழ் அறிவுலகம் உள்ளவரை வாழும்.

Tuesday, April 6, 2010

மறக்கப்பட்ட.. எரிக்கப்பட்ட.. விஞ்ஞானி புரூனோ..!!

யார் இந்த புரூனோ?

bruno_340ஜியார்டானோ புரூனோ.!! நம்மில் யாருக்காவது இந்தப் பெயரைத் தெரியுமா? ஊஹீம். எந்தக் குழந்தையும் ஜியார்டானோ புரூனோபற்றி பள்ளிப்பாடப் புத்தகத்தில் படித்தது இவ்லை. பொதுவாக யாரும் அவரைப்பற்றி பேசுவதும் இல்லை. மறக்கப்பட்ட விஞ்ஞானி இவர் உலகம் உருண்டை, பூமி சுற்றுவதால்தான் இரவுபகல் ஏற்படுகிறது, சூரியன்தான் சூரியமண்டலத்தின் மையம் . சூரியனை மையமாக வைத்தே பூமி சுழன்று கொண்டு இருக்கிறது. விண்வெளியில் தெரியும் விண்மீன்களைப் போன்றதே சூரியன். எல்லா விண்மீன்களுக்கும், ப+மிபோல கோள்கள் உண்டு. இந்த பிரபஞ்சம் எல்லையற்றது என்ற கருத்துக்களை உலகத்தின் கண்முன்னே. முதன்முதல் படைத்த விஞ்ஞானி ஜியார்டானோ புருனோ அதற்காக அவருக்கக் கிடைத்த மிகப் பெரிய பரிசு என்ன தெரியுமா? ரோம் நகர கிறித்தவ திருச்சபை புரூனோவை உயிருடன் பட்டாசு கொளுத்தி எரித்துக் கொண்டாடியது!

புரூனோ.! புரூனோ.!

ஜியார்டானோ புரூனோ ஓர் இத்தாலிய தத்துவவாதி, கணிதவியலாளர், வானவியலாளர், மிகச் சிறந்த எழுத்தாளர், எதிராளியை சிலேடையாக நையாண்டி செய்வதில் வல்லவர், நல்ல பேச்சாளர், இறையியலைச் சார்ந்து பேசுபவர், அறிவியலின் கலங்கரை விளக்கமாக இருந்தவர், ஐரோப்பாவின் மிகப் புத்திசாலியான மனிதர் என்று போன்றப்பட்டவர், ஜியோமிதி, மொழியியலில் வித்தகர், மறுமலர்ச்சி இரசவாதி , 14ம் “நூற்றாண்டின் சாக்ரடீஸ்” எனப் போற்றப்பட்டவர், அனைத்திற்கும் மேலாக வானவியல் தந்தை. கலீலியோ கலீலியின் மிக நெருங்கிய நண்பர் என்று சொல்லப்படுகிறவர். ஆனால் கலீலியோ புரூனோவை நேரில் சந்தித்ததில்லை.

புரூனோ பிறப்பு எப்போது?

இந்தாலிநாட்டில் நேப்பின்ஸ் நகரிலிருந்து 14 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள வெசுவியல் மலைக்குன்றின் வடகிழக்கு சரிவில் உட்கார்ந்திருக்கிறது நோலா என்ற குட்டி நகரம் இதன் அருகில் உள்ள “சிசுலா” என்ற கிராமத்தில் கி.பி.154ல் புரூனோ பிறந்தார் நோலாவில்தான் சால்டிய கிரேக்கர்கள் முதன்முதல் காலனி அமைத்தனர் ரோமானியப் பேரரசுகளின் காலத்திய முக்கிய நகரங்களில் நோலாவும் ஒன்று உயர்குடி மக்கள் எனப்படும், கிறித்தவ திருச்சபையின் துறவிகள் மடங்களும் இங்குதான் கட்டப்பட்டன. இப்படி வரலாற்ற சிறப்பு மிக்க இடத்தில், “பாராசல்ஸ் “ என்ற வேதியல் விஞ்ஞானி, உலகை விட்டு மறைந்த பிறகே, புரூனோ இந்த உலகைக் காண வந்தார். புரூனோவின் பிறப்ப இரண்டு காரணங்களால் முக்கியத்துவப்படுத்தப்பட்டது. ஜீசஸ் சமூகத்தின் முதல் ஜெனரலான “லபோராதேய” பதவிஏற்பு இப்போது தான் ஏற்பட்டது.

இளமைக் காலம்

கிறித்தவ திருச்சபையின், புனிதநீர், குழந்தை புரூனோ மேல் தெளிக்கப்பட்டது. “பிலிப்யோ புரூனோ” என்ற கத்தோலிக்க கிறித்தவப் பெயர் சூட்டப்பட்டது. புரூனோவின் தந்தை பயோவான்னி புரூனோ. இவர் ஸ்பானிஷிய இராணுவ அதிகாரி. தாயைப்பற்றியம் பிறந்த மாதம், நாள் எதுவும் சரியாக தெரியப்படவில்லை. 8வயதில் நோலாவில் உள்ள பள்ளிக்கு கல்வி பயில அனுப்பப்பட்டார். 1561ல் மதக்கல்வி பயிலவும், கிறித்தவ போதகராகவும் டொமினிகனிலுள்ள துறவிகள் மதத்திற்குச் சென்றார். அங்குள்ள பாதிரிகளிடமும், சகோதரர்களிடம் தத்துவம், இறையியல், அறிவியல் போன்றவற்றில் அனுபவமும், அறிவும் பெற்றார். அஙகுள்ள துறவி ஒருவரின் மேலுள்ள ஈடுபாட்டாலும், கிறித்தவ திருச்சபையாலும், “பிலிப்போ புரூனோ” என்ற பெயரை “ஜியார்டானோ புரூனோ” என மாற்றிக்கொண்டார். ஜியார்டானோ புரூனோ 1575ல் டொமினிகளில் கிறித்தவ புனித துறவி பாதிரியார் ஆனார்.

மன மாற்றம் இயற்கை ஆய்வு!

புரூனோ எதனையும் வெளிப்படையாகப் பேசுபவர். கத்தோலிக்க கற்பித்தலில் உள்ள அறிவின் ஆதாரம் அறியும் முறை, நடைமுறையற்ற பழக்கவழக்கங்கள் பற்றியும் ஆராய்ந்தார் விளைவு மதத்துரோகம் மற்றும் கிறித்தவ திருச்சபையை எதிர்க்கிறார் என குற்றமும், பட்டமும் சூட்டப்பட்டார் 1576ல் கிறித்தவ துறவி வாழ்க்கையை முடிக்கவேண்டியதாகி விட்டது. அறிவைப் பற்றிய காதலும், அறியாமைபற்றிய வெறுப்பும் புரூனோவை ஒரு புரட்சியாளனாக மாற்றியது. பாரம்பரிய அதிகாரத்தை ஒத்துக்கொள்ள மறுத்தார். இதனால் தனிமைப்படுத்தப்ட்டார். இதன் விளைவாக நாடோடியாக பல நாடுகளில் அலைய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஆனாலும் உண்மைகளை வெளியிடுவதில் தயக்கம் காண்பிக்க வில்லை. அதில் ஒன்றுதான் சூரியனை மையமாகக் கொண்டு, பூமி சுற்றுகிறது என்பதும்.!

நிக்கோலஸ். புரூனோ. தூண்டுதல்.

புருனோ, அறிவியல் கண்டு பிடிப்புகள் எதுவும் செய்யவில்லை. அவருக்க முன் வாழ்ந்த நிக்கோலஸ் கோபர்நிகஸின் கொள்கையான பிரபஞ்ச மாதிரியை அறியமுற்பட்டார். ஜியார்டானோ புரூனோவினர் விவாதரீதியான, அறிவியல் தேடும் ஆதார கருத்துக்கள், 20ம் நூற்றாண்டு விஞ்ஞானிகளின், தத்துவவாதிகளின் செயல்பாடுகளுக்கு மிகவும் தூண்டுதலாக இருந்தது.

அறிவியலின் இருண்ட காலம்!.

நோலா டொமினிக்கனிலிருந்து, புரூனோ 1579ல் ஜெனிவா சென்று ஆசிரியராக பணியாற்றினார். மொழியியலிலும், வாதத் திறமையிலும், நக்கல் பேச்சிலும் வல்லவர். பாரம்பரிய கிறித்தவ கருத்துக்களுக்கும், அர்ஸ்ட்டாட்டில் கொள்கைகளுக்கும் எதிராகப் பேசியவர். புரூனோ வாழ்ந்த காலம் என்பது தத்துவம், அறிவியலிடமிருந்து விவாகரத்து பெற்ற காலகட்டம்! 16ம் நூற்றாண்டு அறிவியலின் இருண்ட காலம் என்று சொல்லப்படுகிறது. விஞ்ஞானிகள் தங்களின் விஞ்ஞானக் கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்ல முடியாமல், ரகசியமாக ஒளித்து வைத்துக்கொண்டு தங்களுக்குள் பரிமாறிக்கொண்ட காலம் அது. அப்போது வாழ்ந்த, புரூனோ, கலீலியோ போன்ற விஞ்ஞானிகள் வானவியலின் உன்மைகளைச் சொல்லப் பயந்து. பின் சொல்லியதால் சித்திரவதைப்பட்ட காலம் இது.

மொழியியல். வித்தகர். போதகர்.!

புரூனோ, ஜெனிவாவிலிருந்து டௌலோவ்விற்குச் சென்றார். அங்கு இரண்டு ஆண்டுகள் தங்கி முதுகலை பட்டம் பெற்றார். கற்பித்தல் மற்றும் தொழிலையும் தொடர்ந்தார். அரிஸ்டாட்டில் பற்றிய உரைகளை விமர்சனமும் செய்தார். அப்போது உலகமக்களின் கருத்துக்கள் தத்துவஞானி அரிஸ்டாட்டிலின் கைகளுக்குள் சிக்குண்டு கிடந்தது. ஒருவிஷயம் அரிஸ்ட்டாட்டில் சொன்னார் என்பதற்காகவே நம்பப்பட்டது. 1300களில் வாழ்ந்தவர் அரிஸ்டாட்டில். “ பூமி தட்டையானது சூரியனும் நட்சத்திரங்களும் பூமியை சுற்றி வருகின்றன” என்ற கொள்கையை விதைத்தவர் அரிஸ்ட்டாட்டில். மேலும் பெண்களுக்கு ஆண்களைவிட பற்களின் எண்ணிக்கை குறைவு என்றும் சொன்னவர். எனவே புரூனோ, அரிஸ்டாட்டிலின் கருத்துக்களை மாற்றி விளக்கம் சொல்லி சுமார் 120 கட்டுரைகள் வெளியிட்டார். இவை ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் கருத்தையும் கூட மறுத்தன. விளைவு புரூனோ டௌலோவ்லீயிருந்து பிரான்ஸ் நோக்கி 1581 பயணம் செய்ய வேண்டியதாகி விட்டது.

பிரபஞ்சக் கருத்து வெளியீடு மதவாதிகள் எதிர்ப்பு!

புரூனோ பிரான்சிலுள்ள பாரிசில் அரசர் மூன்றாம் ஹென்றியின் ஆதரவுடன் தங்கினார். இங்கே புரூனோவின் நாவன்மையால் 80 நண்பர்கள் உருவானார்கள். எளிதில் இவர்களைச் கவர்ந்தார். இவர்கள் அனைவரும் கடவுள் தொடர்பான மாயமந்திரக்கலையில் நம்பிக்கை உள்ளவர்கள். மாயமந்தரத்துடன், நினைவுக்கலையை பலப்பல வடிவங்களில், முறைகளில் சொல்லித்தந்தார். ரேமாண்டுலாலி பற்றியும், நினைவுக்கலையின் அற்புதம் பற்றியுமான இவரின் முதல் எழுத்து வெளியீடுகள் பாரிசில்தான் நிகழ்ந்தன. பின் 1582ல் புரூனோ தன் 34வது வயதில் இங்கிலாந்து சென்றார். அங்கே “ காஞ்டெலாஜோ” என்ற நண்பரின் உதவியுடன், இங்கிலாந்து அரசியை அணுகினார். அவரைப் புகழ்ந்து பேசினார்:, எழுதினார். இங்கிலாந்தில் 2 ஆண்டுகள் வாழ்நதபோதே அவரது சிறந்த எழுத்துக்கள் வெளியிடப்பட்டன. இங்கே பிரபஞ்சம் பற்றிய புதுக்கருத்தினை வெளியிட்டார். இங்கேதான் பிறந்தது கலகம்.

பிரபஞ்ச ஆசான் புரூனோ!

பிரபஞ்சம் எல்லையற்றது முடிவற்றது பிரபஞ்சத்தின் ஒரு பகுதிகள் சூரிய குடும்பம். அதுமட்டுமல்ல பூமி தன்னைத்தானே சுற்றுகிறது. அதனாலேயே இரவுபகல் உண்டாகிறது. சூரியன்என்பது இரவு வானத்தில் தெரியும் விண்மின்போல ஒன்றுதான். சூரியன்தான் பூமிபோன்ற கோள்களின் மையம். இவையனைத்தும் சேர்ந்தது சூரிய குடும்பம். வானில் தெரியம் விண்மீன்களுக்கும் இதே போன்ற கோள்கள் உண்டு. சூரிய குடும்பம் என்பது பிரபஞ்சத்தின் அடிப்படை அலகு. விண்மீன்கள் பிரபஞ்ச வெளியில் விரவிக்கிடக்கின்றன விண்மீன்கள் இயற்பியல் விதிப்படி இயங்குகின்றன. விண்மீன்களுக்கு இடையே ஈதர் என்ற காற்று உள்ளது. என பல கருத்துக்களை விதைத்தார் புரூனோ. உலகில் புவிமையக் கொள்கையை முதன் முதலில் நேரிடையாக எதிர்த்த முதல் தத்துவ ஆவான் ஜியார்டானோ புரூனோ.

கடவுள் இல்லை! இயற்கையே அனைத்தும்!

புனோவின் கடவுள் பற்றிய தத்துவம் வித்தியாசாமானது. கடவுள் விண்மீன்களின் எல்லை தாண்டி சொர்க்கத்தில் இல்லை. உயிரில் உள்ள அனைத்து பொருட்களிலும் இயல்பாகவே நீக்கமற நிறைந்திருக்கிறார். கடவுளை அனைவராலும் உணரமுடியம். உலகம் நீர், பூமி, காற்று, நெருப்பு என்ற 4 பொருட்களால் ஆனது. இதே பொருட்கள் தான் ஒரேமாதிரியாய் பிரபஞ்சம் முழுவதும் பரந்துபட்டு விரிந்து கிடக்கிறது. எல்லையற்ற இறைவன் எல்லையற்ற பிரபஞ்சத்தைப் படைத்துள்ளார் என்று தெரிவித்தார் புரூனோ. ஆனால் அண்டம் என்பது பற்றி ஏதும் குறிப்பிடவில்லை. கடவுளுக்கும் சொர்க்கத்துக்கும் எந்த உறவும் கிடையாது என்றார்.

வால்மீன் பற்றி முதலில் சொன்னவர்!

ஜியார்டானோ புரூனோ வால்மீன்கள் பற்றி ஏராளமாய் எழுதியுள்ளார். “பிரபஞ்சத்தின் ஒரு பகுதிதான் வால்மீ.ன் குறுகிய வாழ்நாள் உடைய உற்பத்திதான் வால்மீன் என்பவை. இவையும் கூட புனித சொர்க்கத்தின் ஒரு பகுதியே. ஒவ்வொரு வால்மீனும் ஓர் உலகம் தான். ஆனாலும் கூட, வால்மீன்களும் நிரந்தர வான்பொருட்கள்தான். இவையும் நிலம், நீர், நெருப்பு, காற்று என்ற 4 அடிப்படைப் பொருட்களால் உண்டானவை” என்ற கருத்தினையே கொண்டிருந்தார் புரூனோ.

புத்தக வெளியீடுகள்!

புரூனோ 1577 - 86 ம் ஆண்டுகளில் அறிவியல். தத்துவம் இறையியல் பற்றி பல்வேறு வகையான கருத்துக்களுடன் 20 புத்தகங்கள் வெளியிட்டார். இதன் விளைவாக புரூனோ பல எதிர் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. இதே காலகட்டத்தில் ரோத்தள் என்பவரும் 1587ல் டைகோபிராசி என்ற விஞ்ஞானியும், எல்லையற்ற பிரபஞ்சம் பற்றி கருத்துக்களை வெளியிட்டனர். புரூனோ காலத்து வானவியலாளர்கள் சிலர் சூரிய மையக் கொள்கையை ஒத்துக் கொண்டனர். ஆனால் புருனோ என்றும் தன்னை வானவியலாளராக ஒப்புக் கொண்டதே இல்லை.

காட்டிக்கொடுக்கப்பட்ட புரூனோ!

bruno_250பல்வேறு மத எதிர்ப்பு காரணம் காட்டி புரூனோ 1585ல் கட்டாயமாக பாரிசிலிருந்து மீண்டும் வெளியேற்றப்பட்டார். பின் ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரம் சென்றார் அங்கே லத்தீன் மொழியில்,“நினைவுக்கலை” தொடர்பாகவும், வானவியல்பற்றியும் நிறைய கவிதைகள் எழுதினார். 1591ல் மீண்டும் இத்தாலிக்க நண்பர்கள் புத்தக சந்தையில் பங்குபெற புரூனோவை அழைத்தனர். நினைவாற்றல் கணக்கை சொல்லித்தரவும், அதன்மாய மந்திரங்களை அறியவுமே புரூனோ வரவழைக்கப்பட்டார். அங்குள்ள படுவா, ஊரிpல் ஆசிரியர் பணி புரியவும் விரும்பினார் கலீலியோ அங்கு வந்தார் வெனிஸீக்குத் திரும்பினார். நண்பர் மைசிங்கோ எதிர்பார்த்தபடி மாயங்கள் எதுவும் சொல்லித்தரவில்லை. ஏமாந்த மைசிங்கோ, மதத்துவேஷம் என்ற போர்வையில் கிறித்தவ திருச்சபையிடம் புரூனோவைக் காட்டிக் கொடுத்தார்.

சிறையில் புருனோ!

புரூனோ கிறித்தவ திருத்ச்சபையை எதிர்த்து பிரச்சாரம் செய்தமைக்காகவும், மதத்துவேஷ கருத்துக்களுக்காகவும் 1592ம் ஆண்டு மே 22ம் நாள் கைது செய்ய்ப்பட்டார். 1593ல் ரோமிற்கு கொண்டுவரப்படார். அன்றைய போப் மூன்றாம் கிளமெண்டிடம், சமரசம் ஏற்படலாம் என புரூனோ நம்பினார். புரூனோவின் வாதமும், மொழித்திறமையும் அங்கு எடுபடவில்லை. தோல்வியுற்றார். ரோம்நகரில் 6 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார். இடையிடையே நீதி விசாரணை திருச்சபைக்கு ஆதரவாகவே நடந்தது. ஜனவரி 8ம் நாள், 1600ல், தனியார் நிர்வாகிகளிடம், மதத்துவேஷ குற்றத்துக்காக எரிக்க புரூனோ ஒப்படைக்க்ப்பட்டார். 1600ம் ஆண்டு பிப்ரபரி 17ம் நாள், புரூனோவை உயிருடன் எரிக்க ஆணையும் பிறந்தது.

கொலைத்தண்டணையின் கொடுரம்!!

புரூனோவின் எரிப்பு தண்டனை நிறைவேற்றப்படும் நாள் பிப்ரவரி 17, 1600 அவரது அறிவியல் செயல்பாடுகளுக்காகவும், மனித நேயத்துடனும், தண்டனை நிறைவேற்ற வேண்டிய அதிகாரிகள் கொஞ்சம் கருணையுடனும் செயல்பட்டனர். புரூனோமேல் இரக்கம் கொண்டு இவர்கழுத்தைச் சுற்றி வெடிகுண்டுப் பொடியைத் தூவினர். இது அதிக வேதனையின்றி, உயிர் முடிய உதவி செய்யும். ஆனாலும் கூட தண்டனையில் குறிப்பிட்டுள்ளபடி, அவரது நாக்கும், தாடையுடன் சேர்த்து ஆணியடிக்கப்பட்டது. புரூனோ பேசாம இருப்பதற்காக. ஏசு நிலுவையில் அறையும் போது செய்யப்பட்டது போலவே ஒரு நீண்ட குச்சியில் கட்டையில் அறையப்பட்டார் புரூனோ முகத்தில் இருப்புக் கவசம் மாட்டப்பட்டது. இவரைச்சற்றி குச்சிகள் போடப்பட்டன. இவையனைத்தும் “கம்ப்போ டே ப்யோரி”என்ற ரோமனின் புகழ்பெற்ற சதுக்கத்தில் அனைவரும் பார்க்கும்படியே நடைபெற்றது. ஜியார்டானோ புரூனோ உயிருடன் எரித்து கொளுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டார் கிறித்தவ திருச்சபையில் அவரது உயிர் போயிற்று. ஆனால் அவரின் புகழ் மறையவில்லை.

இறப்புக்குப் பின்னும் வாழும் புரூனோ!

புரூனோ கொலைசெய்யப்பட்ட 4 ஆண்டுகளுக்குப்பின் 1603ல் இலண்டாம் ஜான்பால் போப்பாக பதவிஏற்றார் புரூனோவின் இறப்புக்கு வருத்தம் தெரிவித்தார் புரூனோ வானவியல் கருத்துக்களுக்காக கொளுத்தப்படவில்லை, கடவுள் மறுப்பு கொள்கைகளுக்காகவே தீயிடப்பட்டார். இவரின் மரண கொலைத் தண்டனையின் காரண பதிவேடுகள் மட்டுமே காணப்படவில்லை. கொலையின் காரணம் துல்லியமாக தெரிவிக்கபப்டவில்லை புரூனோ உலகைவிட்டுப் போன 7 ஆண்டுகளுக்குப்பின் அவருக்கான சிலை நோலாவில் வைக்கப்பட்டது. சந்திரனின் காணப்படும் கிரேட்டர்கள்ஃபள்ளத்தாக்குகளில் ஒன்றுக்கு “ஜியார்டானோ புரூனோ”என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் விட்டம் 20 கி.மீ உடல் பிரிந்தாலும் புருனோவின் கருத்துக்களே 20ம் நூற்றாண்டின் விஞ்ஞானிகளுக்கு வானவியல் பற்றிய விதைகளாக விளை நிலங்களாக வெளிப்பட்டன.