Showing posts with label மெடிக்கல் Technology. Show all posts
Showing posts with label மெடிக்கல் Technology. Show all posts

Saturday, February 20, 2010

ஹீமோகுளோபின் உடலில் அதிகரிக்க எளிய வழி

உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்! எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி. எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம். இந்த நிலையில்தான் இன்று பலபேர் இருக்கின்றனர்.

இந்த நிலைமையை நீக்க, மருத்துவரிடம் சென்று இதற்கு ஏதாவது மாத்திரை, மருந்து வாங்கி சாப்பிடலாம் என்று, மருத்துவமனையில் வரிசையில் காத்திருந்து அவரை பார்த்தால் பல பரிசோதனைகளை செய்யச் சொல்லுவார். அவர் கூறிய பரிசோனைகள் அனைத்தும் செய்து, அந்த பரிசோதனைகள் அனைத்தும் அவரிடம் காண்பித்தால், உங்களுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறது என்று கூறுவார். நான் உங்களுக்கு மாத்திரை, மருந்து எழுதித்தருகிறேன். ஆறு மாதங்கள் சாப்பிடுங்கள் சரியாகிவிடும் என்பார். அவர் கொடுக்கும் அதிக விலையுள்ள மாத்திரைகளையும், மருந்துகளையும் விலை கொடுத்து வாங்கி, அவருக்குரிய கட்டணத்தையும் கொடுத்து, ஆறுமாதம் சாப்பிட்டாலும் ஏதோ சிறிது பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்கு உள்ளதே தவிர, மறுபடியும் பழைய நிலையில் பாதிகூட சரியாகவில்லை.

நமது உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது அந்த அணுக்கள் குறைந்த ரத்தம் உடல் முழுவதும் உற்சாகமாக ஓட முடிவதில்லை. நமது உடலின் பாகங்கள் சுறுசுறுப்பாக இயங்கமுடி வதில்லை. உடல் களைப்பு அடைகிறது. பத்து பேர்கள் செய்யவேண்டிய வேலையை இருவர் செய்வார்களானால், எவ்வளவு தாமதம் ஆகுமோ, எவ்வளவு தடங்கல் ஏற்படுமோ, அதே தடங்கலும், தாமதமும் நம் உடலில் ஏற்படுகிறது. உடலில்

ஹீமோகுளோபின் குறையும் பொழுது மேலே குறிப்பிட்ட அத்தனை குறைபாடுகளும் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படுகிறது.

நமது உடல் அதற்கு தேவையான சத்துக்களை, நாம் உட்கொள்ளும் ஆகாரத்திலிருந்து பிரித்து எடுத்துக் கொள்ளுகிறது. எவ்வளவு சத்துக்கள், எந்தெந்த சத்துக்கள் தேவையோ, அந்த அளவு மட்டும் உறிஞ்சி எடுத்துக்கொண்டு, மீதி உள்ளவற்றை கழிவு பொருட்களாக உடலிருந்து வெளியேற்றி விடுகிறது. அதிகமான சத்துக்களை நாம் உண்டாலும், அத்தனை அளவு சத்துக்களையும் உடல் ஏற்றுக்கொள்வதில்லை. மீதியை கழிவுப் பொருட்களாக தள்ளிவிடுகிறது.

ரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின் 14 - 18 கிராம் அளவிலும், பெண்களுக்கு 12 - 16 கிராம் அளவிலும் இருக்கவேண்டும். 8 கிராம் அளவிற்கு கீழே குறையும் பொழுது, இரத்த சோகை என்ற நோயும், மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகின்றன. ரத்தத்தில் எவ்வளவு அளவு ஹீமோகுளோபின் இருக்கிறது என்பதை சோதனைச் சாலையில் ரத்தத்தை பரிசோதிக்கும் பொழுது தெரியவரும். ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவிற்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து, களைப்பு, இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் பொழுது ரத்தம் நல்ல சிகப்பு நிறமாகவும், உடலில் ரத்த ஓட்டத்தின்போது நுரையீரலுக்குச் சென்று நாம் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்போது, அந்த மூச்சுக் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை ரத்தம் ஏற்று உற்சாகம் பெறுகிறது. பிறகு ரத்தம் உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது, தன்னில் ஏற்கும் கழிவுப் பொருட்களை கார்பன்டை ஆக்ûஸடு ஆக மாற்றி, நுரையீரலுக்கு திரும்ப வந்து வெளியேற்றுகிறது. பிறகு உற்சாக ரத்த ஓட்டமாக மாறி உடலுக்கு சக்தியூட்டுகிறது. மேலும் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை ரத்தத்தில் ஏற்றுக்கொண்டு, உடலில் உள்ள பல சுரப்பிகளுக்கு வழங்கி, அவைகளை நன்கு இயக்கி, உடலுக்கு வேண்டிய திரவங்களை உற்பத்தி செய்ய வைக்கிறது.

உடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது. நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக் கொண்டு, அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள். காலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். பிறகு மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள். இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள்.

நாட்கள் காலை 6 மணி மதியம் 12 மணி மாலை 6 மணி மொத்தம் பழங்கள் 1வது நாள் 1 1 1 3 2வது நாள் 2 2 2 6 3வது நாள் 3 3 3 9 4வது நாள் 4 4 4 12 5வது நாள் 4 4 4 12 6வது நாள் 4 4 4 12 7வது நாள் 3 3 3 9 8வது நாள் 2 2 2 6 9வது நாள் 1 1 1 3

ஒன்பது நாட்கள் செய்து முடித்த பிறகு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் பரிசோதித்துப் பாருங்கள். தேவையானால் மறுபடியும் ஒரு தடவை பட்டியலில் குறிப்பிட்டபடி செய்து பாருங்கள். இப்பொழுது உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளாபின்கள் திருப்தியான அளவில் உயர்ந்து இருக்கும். இந்த ஹீமோகுளாபின் உயர்வு நமக்கு பல வியாதிகளை வராமல் தடுக்கும். உடலில் உற்சாகம் பெருகும். வலிவோடும், வனப்போடும் உடல் மிளிரும். இப்படி செய்து அருந்தும் கருப்பு திராட்சை ஊறிய நீர், ரத்தத்தில் கலந்து ஹீமோகுளோபின்கள் உருவாக காரணமாக இருக்கும். செலவு அதிகமில்லாத இந்த எளிய வழியால் உடலில் இழந்த சக்தியையும், உற்சாகத்தையும் நாம் பெறலாம்.

Monday, July 27, 2009

இரத்த வகைகள்


மனித உடலில் ஓடும் இரத்தத்தின் நிறம் சிவப்பு மட்டுமே. ஆனால் அனைவரின் ரத்தமும் ஒரே வகை அல்ல. இரத்த வகைகள் பற்றிய விவரம் அறியப்படாத காலத்தில் இரத்தம் தேவைப்பட்ட நோயாளிகளைக் காப்பாற்ற இயலவில்லை. அவர்களுக்கு இரத்தம் செலுத்துவது மிகக் கடினமாக இருந்தது. ஏனெனில் பல எதிர்விளைவுகள் ஏற்பட்டன. உயிர்களைக் காக்க முடியவில்லை.

1900 ஆம் ஆண்டில் டாக்டர். லான்ஸ்டைனர் என்பவர் ரத்தத்திலுள்ள பிரிவுகளைக் கண்டு பிடித்தார். இரத்தமானது பொதுவாக 4 வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை 1. “A” வகை ரத்தம், 2. “B” வகை ரத்தம், 3. “AB” வகை ரத்தம் 4. “O” வகை ரத்தம். இவற்றில் “A” வகை ரத்தத்தை A1, B2 என்ற துணை வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.

இரத்தப் பிரிவுகளில்... A வகையினர் 42%ம், ஆ வகையினர் 8%ம், AB வகையினர் 3%ம், O வகையினர் 47%ம் மனிதர்களில் அமைந்துள்ளனர். ‘O’ வகை ரத்தமானது பொது ரத்ததானத்திற்குத் தகுதியானது அதனை “Universal Donor” என்பார்கள். ஏனென்றால் ‘O’ வகை ரத்தமுள்ளவர்கள் A, B, AB போன்ற ரத்த வகையினருக்கும் ரத்தம் கொடுக்கலாம்.

அதுபோன்று AB ரத்த வகையினரை Universal Recipient என்று அழைப்பார்கள். இவ்வகை ரத்தமுள்ளவர்களுக்கு O, A, B வகை ரத்தங்களில் எதனையும் செலுத்தலாம் (ஆயினும் அந்தந்த வகை ரத்ததிற்கு அந்தந்த வகை ரத்தம் செலுத்தும் முறைதான் சிறந்தது)

புதிய இரத்த வகைகள் :

ரத்தப்பிரிவுகளைக் கண்டுபிடித்த பின்னர், ஒரே ரத்த வகையைத் தானம் செய்த போதிலும் பல எதிர்விளைவுகள் ஏற்பட்டன. அதன் காரணமாக மருத்துவ அறிஞர்கள் இரத்தம் சம்பந்தமான தொடர் ஆராய்ச்சிகளில் இறங்கினர். Rh ரத்த வகையைக் கண்டுபிடித்தனர் A, B, AB, O ரத்த வகைகள் 1900லும், Rh ரத்த வகைகள் 1940-லும் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்தப் புதிய ரத்த வகையானது Rhesus என்ற குரங்கிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் Rh-group என்று பெயரிடப்பட்டது. இது Rh – positive group என்றும் Rh – negative group என்றும் பிரிக்கப்பட்டது.

இதன் பின்னர்... A வகை ரத்தம் உள்ள ஒருவருக்கு A வகை ரத்தம் செலுத்தும்போது Rh வகையும் ஒற்றுமையாக அமைய வேண்டும் என்ற புதிய அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட்டது. அதாவது A வகையினர் Rh+ ஆக இருந்தால் அவர்களுக்கு A வகை Rh+ ரத்தம் தான் கொடுக்க வேண்டும். Rh நெகடிவ் உள்ளவருக்கு Rh நெகடிவ் ரத்தமே சேரும்.

பாதுகாப்பான ரத்தம் செலுத்தும் முறைகள் :

இரத்தம் பெறுபவர், தருபவர் இருவரின் ரத்த வகையும், ஒன்றாக இருக்கவேண்டும். இரத்தம் வழங்குபவருக்கு எவ்வித தொற்றுநோய்களும் இருக்கக் கூடாது. (உம். மலேரியா, மஞ்சள் காமாலை, பால்வினை நோய், எய்ட்ஸ்.

இரத்ததானம் செய்பவருக்கு ரத்தம் போதுமானளவு இருக்கவேண்டும் (HB 8% க்கு மேல் தேவை). இளைஞர்கள், நடுத்தர வயதினர் ரத்தம் வழங்கலாம். 60 வயதிற்கு குறைந்தவராக இருத்தல் அவசியம். ஒரு முறை ரத்தம் கொடுத்தவர் குறைந்தது மூன்று மாதங்கள் கழித்து மீண்டும் ரத்தம் கொடுப்பது நல்லது. ரத்தம் செலுத்தும் முன்பு Cross matching செய்ய வேண்டும்.

இரத்த தானம் ஏன்?

இரத்த சோகை நோய்களில் மிகக் கொடுமையானது தலாசீமியா என்னும் நோய். இந்நோய் உள்ள குழந்தைகளுக்கு 15 நாட்களுக்கொருமுறை வீதம், ஆயுள் முழுவதுமே இரத்ததானம் தேவைப்படுகிறது. இது ஒரு பாரம்பரிய ரத்தசோகை நோய்.

கருவிலுள்ள குழந்தையின் ஹீமோகுளோபின் குழந்தையாகப் பிறந்தவுடனும் மாறாமல் இருப்பதால், உயிர்வாழ புது ரத்தம் தேவைப்படுகிறது. இந்நோய் தாக்கிய 3 -4 வயது குழந்தைகளுக்கு 6 வாரங்களுக்கு ஒரு தடவையாவது ரத்ததானம் கொடுக்க வேண்டும். வளர, வளர அடிக்கடி ரத்தம் தேவைப்படும்.

இதுபோன்ற ரத்தசோகை பீடித்த ஆயிரக்கணக்கானோர் மாற்று ரத்தம் பெற்றே உயிர் வாழ்கின்றனர். விபத்து ஏற்பட்டு இரத்தமிழந்தவர்கட்கு மட்டும்தான் ரத்ததானம் பயன்படுகிறது என எண்ண வேண்டாம். குறிப்பிட்ட காலங்களில் கோயில்களுக்குச் சென்று வழிபடுவதைப் போல, ரத்ததானம் செய்து பல உயிர்களை வாழச் செய்யலாம். மேலும் ரத்ததானம் செய்பவர்களுக்கு இருதய நோய் வருவது குறைவு என்று ஓர் மருத்துவ ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

ஹீமோபிலியா :

இரத்தம் தொடர்பான வியாதிகளில் ஒன்று ஹீமோபிலியா. இது பெரும்பாலும் ஆண்களையே தாக்குகிறது. இது மரபு அணு சார்ந்த பிறவிக் கோளாறு. இதனால் காயங்கள் ஏற்பட்டால் இரத்தம் எளிதில் உறையாமல் இரத்தம் தொடர்ந்து வெளியேறிக் கொண்டே இருக்கும். இரத்தம் உறையச் செய்யும் செயல் முறைகளில் 8வது காரணி இல்லாமல் இருப்பது அல்லது குறைவாக இருப்பதே இதற்கு காரணம். இரத்தத்தின் உறையும் தன்மையில் ஏற்படும் குறைபாடு நோயான ஹீமோபிலியாவை மாற்றுமுறை மருத்துவமான ஹோமியோபதி மூலம் பெருமளவு கட்டுப்படுத்த இயலும். இதற்கு பயன்படும் முக்கியமான ஹோமியோபதி மருந்து: பாஸ்பரஸ் இரத்தம் கசியும் வியாதிகள் அனைத்தும் ஹீமோபிலியா அல்ல. இரத்தம் உறைவதில் ஏற்படும் கோளாறுகள் பல காரணங்களால் ஏற்படுகின்றன.

Monday, December 29, 2008

இரத்தத்தை தூய்மையாக்க ஒரு கருவி

தொற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய கருவியை கண்டுபிடித்துள்ளனர். டயாலிசிஸ் கருவியைப் போன்றது இது. மெல்லிய இழைகளின் துணைகொண்டு இரத்தத்தில் உள்ள வைரஸ்களை இந்த கருவி வடிகட்டிவிடுகிறது. இரத்தக்குழாயில் இருந்து குழாய்வழியாக இரத்தம் இந்தக் கருவிக்குள் செல்கிறது. சுத்தம் செய்யப்பட்ட இரத்தம் மீண்டும் உடலுக்குள் செலுத்தப்படுகிறது. எண்ணற்ற நோய்கள் இந்தக் கருவியினால் குணப்படுத்தப்படுகின்றன.

நாளொன்றுக்கு 14,000 பேர் எச்.ஐ.வி. வைரஸ்களால் பாதிக்கப்படுகிறார்கள். இந்தக் கருவியினால் எய்ட்ஸ் நோயாளிகளின் இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, நீடித்த ஆயுளுக்கு வழிபிறந்துள்ளது. சாண்டிகோவின் யேத்லான் மருத்துவமனை தலைவர் ஜிம் ஜோய்ஸ் கூறும்போது இந்த கருவி ஒரு டயாலிசிஸ் கருவியைப்போல் செயல்படுவதாக கூறியுள்ளார்.

உடலில் உள்ள அனைத்து இரத்தமும் இந்தக் கருவியில் உள்ள பெட்டகத்தின் வழியாக எட்டு நிமிடத்திற்கொருமுறை செலுத்தப்படுகிறது. இரத்தத்தில் உள்ள அனைத்து வைரஸ்களும் சிலமணி நேரங்களுக்குள் நீக்கப்படுகின்றன. எச் ஐ வி, ஹெபடிடிஸ்-சி, தட்டம்மை, ஃப்ளூ ஆகிய வைரஸ்கள் எளிதில் நீக்கப்பட்டுவிடுகின்றன. பெரிய அளவிலான இந்தக் கருவியை மருத்துவமனையிலும், சிறிய அளவிலான கருவியை அவசரகால ஊர்திகளிலும் பயன்படுத்த முடியுமாம். தீவிரவாதிகளினால் ஏவப்படும் வைரஸ்களில் இருந்து உயிர்காக்கவும் கூட இந்தக் கருவி பயன்படுகிறது.

சிறுநீரகம் செயலிழந்தவர்களுக்கு டயாலிசிஸ் செய்யப்படுகிறது. உடலில் உள்ள இரத்தம் அனைத்தும் செயற்கை சிறுநீரகம் வழியாக செலுத்தப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது. டயாலிசிஸ் என்பது உயிரை தக்கவைப்பதற்கான சிகிச்சை மட்டும்தான். நோயில் இருந்து விடுதலை அளிப்பதற்கான சிகிச்சையல்ல. வலிநிறைந்ததும் செலவு பிடிப்பதுமான டயாலிசிஸ் சிகிச்சை இப்போது நிறைய பேருக்குத் தேவைப்படுகிறது. இரத்தம் சுத்தப்படுத்தும் கருவியும் டயாலிசிஸ் கருவியைப் போன்றது தான்.