Friday, April 6, 2012

உடலுக்கு ஆபத்தை உண்டாக்கும் சிக்கன் 65

சிவப்பு நிறத்தை பளிச்சென்று கடைகளில் அலங்காரமாக வைத்திருக்கும் சிக்கன் 65 உடலுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது என்றும் சிக்கன் அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு சிறுநீரக கோளாறுகளும், மரபணு பாதிப்புகளும், கழுத்துக் கழலை நோயும், புற்று நோயும் ஏற்படும் வாய்ப்பு உண்டு என்றும் மருத்துவ ஆராய்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது சிவப்பு நிறத்தில் கண்களைக் கவரும் வகையிலும் குழந்தைகள் விரும்பும் வகையிலும் சிவப்பு நிறத்தில் சமைக்க வியாபாரிகள் கலர் பவுடரை அதிக அளவில் ஆபத்தை அறியாமல் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் 8 வகையான செயற்கை நிறங்கள் மட்டுமே உணவுப் பொருட்களில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது அதுவும் குறிப்பிட்ட நிலையில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அந்த நிறங்களை ஐஸ்கிரீம் ஃப்ளேவர்டு மில்க், பிஸ்கட், இனிப்பு வகைகள், டின்களில் அடைத்து வரக்கூடிய பட்டாணி வகைகள், பாட்டில் பழ ஜூஸ்வகைகள், குளிர்பானங்கள் என ஏழு வகை உணவுகளில் மட்டுமே சேர்க்க அனு மதி வழங்கப்பட்டுள்ளது. இதை யாரும் கடைபிடிக்கவில்லை.அனுமதிக்கப்பட்ட உணவுவகைகளில் அளவிற்கு அதிகமாக செயற்கை நிறங்களை அளவுக்கு அதிகமாகவோ அல்லது பதப்படுத்தப்பட்ட சிக்கன், பன்றி இறைச்சி போன்ற உணவுப்பொருட்களை சேர்த்தால் நெஞ்சு எரிச்சல், அமிலத்தன்மை அதிகரிப்பால் இரைப்பை அழற்சி, போன்ற பாதிப்புகள் ஏற்படும் என்று குடல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். செயற்கை நிறங்களில் துணிகளுக்கு சாயம் ஏற்றப்பயன்படும் சூடான் டை, மெட்டானில் எல்லோ ரசாயனம் சேர்க்கப்படுகிறது. இதனால் தான் புற்றுநோய் சிறுநீரகக்கோளாறுகள் ஏற்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சிவப்பு நிறத்தைக் கொடுக்க பயன்படும் எரித்ரோசின் அளவு கூடினால் கழுத்துக்கழலை நோய் ஏற்படும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இந்த செயற்கை நிறங்களை இனிப்புகளில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் காரவகைகளில் சேர்க்கக் கூடாது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். Thanks to Theekathir Daily Magazine

No comments: