Thursday, August 4, 2011

தீ விபத்துக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும்

அண்மையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த ஏர்கண்டிஷனரில் குறுக்கு மின்னோட்டப் பாதை உருவானதின் காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. புகை மூட்டம் சூழ்ந்து, மூன்று நோயாளிகள் மூச்சுத் திணறி இறந்த நிகழ்ச்சி மக்களிடையே ஏர்கண்டிஷனர் பராமரிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை ஏற் படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனை களில் உள்ள பராமரிப்புக் குறைபாடு களையும் இது அம்பலப்படுத்தியுள்ளது.

அரசு மருத்துவமனைகள் பொதுப் பணித் துறையால் நிர்வகிக்கப்படுகின்றன. கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் பல தடுப்புச் சுவர்கள் எழுப்பப்பட்டு ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். நான்கு புறமும் மூடப்பட்ட அறை என்பதால் தீவிபத்து காரணமாக எழுந்த புகை ஏற்கனவே நோயுற்று பலவீனமான நிலையில் இருந்த நோயாளிகளை மூச்சுத் திணற வைத்தது. எழுந்து ஓடமுடியாத நிலையில் இருந்த அவர்களை வெளி யேற்ற பிறர் உதவி தேவைப்பட்டது. இதில் ஏற்பட்ட தாமதம் அவர்கள் உயி ரைப் பறித்துவிட்டது.

ஏர்கண்டிஷனர்கள் உள்ள இடங்களில் விபத்து நேராவண்ணம் தடுக்க அவற்றை மூன்று மாதங்களுக்கொரு முறை சுத்தம் செய்ய வேண்டும். வர்த்தக நிறுவனங் களும் அலுவலகங்களும் இந்த நடை முறையைச் சரியாகக் கடைப்பிடிக்கின் றனர். ஆனால் பெரும்பாலான வீடுகளில் ஏ.சி.யில் ஏதாவது ரிப்பேர் ஏற்பட்ட பிறகே சர்வீஸ் மையங்களை நாடுவது வழக்க மாக இருக்கிறது. பராமரிப்பை சரியாகச் செய்வதில்லை. சென்னை போன்ற வெப்பம் அதிகமாக உள்ள மாநகரங்களில் மத்தியதர, உயர்மத்தியதர வர்க்கத் தினரைப் பொறுத்த அளவில் ஏ.சி. பொருத்திக் கொள்வது கிட்டத்தட்ட அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாக ஆகிவிட்டது. ஏர்கண்டிஷனர் மிக அதிகமான மின்சக்தியை உள்ளிழுக்கும் ஒரு சாதனம். ஏ.சி. உள்ள அறையில் நல்ல காற்றோட்டத்தை அது உருவாக்குகிறது. அதனால் அங்கு ஆக்சிஜனின் அளவு சற்று கூடுதலாகவே இருக்கும். எனவே, எளிதில் தீப்பற்றிக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது. மின்னழுத்தம் நிலையாக இல்லாமல் இருக்கும் நேரங்களில் ஏ.சி யின் மெயின் ஸ்விட்சை ஆஃப் செய்துவிட வேண்டும். ஏ.சி.-யின் பக்கத்தில் எளிதில் தீப்பற்றக் கூடிய துணிகள் போன்ற பொருட்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஸ்பிளிட் ஏ.சி. வைத்திருப்பவர்கள் இன்டோர், அவுட்டோர் ஆகிய இரு யூனிட்டுகளையும் மூன்று மாதங்களுக்கொரு முறை சுத்தப்படுத்த வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, ஏ.சி.க்கு மின் இணைப்பு கொடுக்க நல்ல தரமான கம்பிகளைப் பயன்படுத்துவது மிக மிக அவசியம்.

காஸ் சிலிண்டர் பராமரிப்பு

இதே போல, காஸ் சிலிண்டர்களைக் கையாளுவதிலும் எச்சரிக்கை தேவை. சிலிண்டரிலிருந்து ஸ்டவ்வுக் குச் செல்லும் ரப்பர் டியூபை வருடத்திற்கு ஒரு முறை மாற் றிவிட வேண்டும். ஸ்டவ் பர்ன ரை அணைப்பது மட்டும் போதாது. சிலிண்டர் வால் வையும் மூடவேண்டும். வீட் டைப் பூட்டிவிட்டு வெளியே செல்லும் ஒவ்வொரு முறையும், சிலிண்டர் வால்வ் மூடப்பட்டிருக்கிறதா என உறுதி செய்து கொள்வது அவசியம்.

இதில் கவனக் குறைவாக இருந்த ஒரு வீட்டில் சில வருடங்களுக்கு முன் நடந்த ஒரு விபத்து. அவர்கள் வீட்டைப் பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டனர். எரிவாயு கசிந்து வீடு முழுவதையும் நிறைத்த பிறகு வெளியேயும் கசியத் தொடங் கியது. பக்கத்தில் உள்ளவர் களை எரிவாயுவின் வாசனை எட்டியது. சிலிண்டரை மூடும் நல்லெண்ணத்துடன் சிலர் பூட் டை உடைத்து அந்த வீட்டினுள் நுழைந்தனர். இருட்டாக இருந்ததால் ஒருவர் எலெக்ட்ரிக் ஸ்விட்சைப் போட்டார். அவ்வளவுதான்.. வீடு முழுவதும் நிறைந்திருந்த எரிவாயு தீப் பிடித்து எரிய அந்த சிறு பொறி போதுமானதாக இருந்தது. வீட்டுக்குள் சென்றவர்கள் அனைவரும் தீக்கிரையாகி மடிந்தனர். இம்மாதிரி நேரங்களில் உள்ளே சென்றவர்கள் சிலிண்டர் வால்வை மூடி விட்டு, ஜன்னல் கதவுகளைத் திறந்து விட்டு உடன் வெளியே வந்திருக்க வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் எந்த எலெக்ட்ரிக்ஸ்விட்சையும் ஆன் செய்யவும் கூடாது, ஆஃப் செய்யவும் கூடாது. விபத்து நேராமல் தடுக்க கவனமும் சமயோசிதமும் தேவை.

நெருப்பும் மின்சாரமும் எரிவாயுவும் நமது நண்பர்கள். ஆனால் நாம் எச்சரிக்கையுடன் பழக வேண்டிய நண்பர்கள்.

நன்றி: தீக்கதிர்

No comments: