Thursday, May 26, 2011

“மினி’போபால் இனி வேண்டாம்!”

எண்டோசல்பான். இது பயிர்களை தாக்கும் பூச்சிகளை அழிக்க நீரில் கலந்து தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்தா கும். தானிய பயிர்கள், காபி, பருத்தி, பழப் பயிர்கள், பயறுவகைகள், எண்ணெய் வித்து பயிர்கள், உருளைக்கிழங்கு, தேயிலை, நெல், முந்திரி, காய்கறிகள் உள் பட அனைத்துப் பயிர்களுக்கும் இது பயன் படுத்தப்படுகிறது.

“அந்த மருந்துதான் கம்மி வெலையில ஏழைகளுக்கு ஒத்தாசையாயிருக்குது; அதுக்கும் இப்ப வேட்டு வச்சிட்டாங்களா?” என்று சில விவசாயிகள் ஒரு பேருந்து நிலையத்தில் பேசிக் கொண்டனர். அவர்கள் பேசிய இடத்தில் இருந்து சற்று தொலைவில், ஒலிபெருக்கி வாயி லாக, “தடைசெய் தடைசெய்! எண்டோ சல்பானை தடைசெய்!” என்ற முழக்கம் இந்த அப்பாவிகள் காதுகளில் விழுந்ததால், இவ்வாறான உரையாடல் போலும்!

இங்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது. அது கால் நூறாண்டுகளுக்கு முன் தமிழகத்தில் பரவலாக பேசப்பட்டது மாகும்!

அதாவது ஒரு கிராமத்திற்கு வேலைக் குச் சென்றாராம் ஒரு டாக்டர். அந்த கிரா மத்தில் நிலவும் குழப்பத்திற்கு முடிவுகட்ட முயற்சித்தாராம். அதன்படி ஒருநாள் கிராம மக்களை ஓரிடத்தில் அமரவைத்து, இரு கண்ணாடி டம்ளர்களில் ஒன்றில் சாராயத்தையும், மற்றொன்றில் தண்ணீரையும் நிரப்பினாராம். ஒரு புழுவை சாராயம் உள்ள டம்ளரிலும், இன்னொரு புழுவை தண்ணீர் உள்ள டம்ளரிலும் போட்டாராம். சாராயத்தில் போட்ட புழு துடிதுடித்து இறந்துவிட்டதாம்; தண்ணீரில் போடப்பட்ட புழு துள்ளி துள்ளி விளையாடிய தாம்! இதில் இருந்து என்ன தெரிந்து கொண்டீர் என்றாராம் டாக்டர். “சாராயம் குடிக்கிறதாலே எங்க வயித்தில இருக்கிற புழு, பூச்சி எல்லாம் செத்திடுமுன்னு புரிய வச்ச தெய்வமே!” என்று டாக்டரின் காலில் விழுந்தார்களாம்! இப்படித்தான் இன்றும் அறியாமை காரணமாக பெரும்பா லான கிராமப்புற மக்களின் மனநிலையும், பண நிலையும் உள்ளது எனலாம். இத்த கைய பின்தங்கிய உணர்வு நிலைதான் சுரண்டல் வர்க்கத்தின் மூலதனமாக அமைந்துவிடுகிறது.

எண்டோசல்பான் ஒரு லிட்டர் ரூ. 250க்கு கிடைக்கிறது. இது ஒரு ஏக்கருக்கு போதுமானதாக இருக்கிறது. இதற்குமேல் வேறெதும் மருந்து அடிக்க தேவையில்லை. சுருங்கக்கூறின், ஏழைக்கேற்ற எள்ளுருண்டையாக எண்டோசல்பான் இருக்கிறது எனலாம். இதுவே எண்டோ சல்பானின் ஆபத்தை நேரடியாக உணர முடியாத அப்பாவிகளாக கிராமப்புற மக்களை தள்ளிவிட்டுள்ளது. இதுதான் எண்டோசல்பான் போன்ற பன்னாட்டு, உள்நாட்டு சுரண்டல் கம்பெனிகளின் ‘சுரண்டல் பலம்’ ஆகும்!

இதை நன்கு உணர்ந்த இந்திய அரசும், கடந்த 25-29.4.2011 தேதிகளில் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் நடந்த, “உடல் உறுப்புகளை பாதிக்கும் ரசாயன மாசு ஒழிப்பு” உலக மாநாட்டில், “அப்படி ஒன்றும் பாதிப்பு இல்லை” என்று ஒப்பாரி வைத்து, முழுபூசணியை ஒரு சோற்றில் மறைத்துள்ளது. என்ன கொடுமை இது? 1984 டிசம்பர் 3ல் போபாலில், யூனியன் கார்பைடு என்கிற அமெரிக்க நாட்டு கம்பெனியில், ‘லீக்’கான விஷவாயு லட்சக் கணக்கில் மனித உயிரை காவு கொண்டது. இன்றுவரை பிறக்கும் குழந்தைகள் பல்வேறு விதமான ஊனமாக பிறக்கின்றதாம்! அப்படிப்பட்ட கொலைகார கம்பெனியின் தலைவர் ஆண்டர்சன்னை பிடிக்க துப்பில்லாத இந்த ஐ.மு.கூட்டணி அரசிடம் வேறெதை எதிர்பார்க்க முடியும்?

அதாவது 1976-78 ஆண்டுகளில் கேரளாவில் குறிப்பாக கோழிக்கோடு மாவட்டத்தின் 11 கிராமங்க ளில் சுமார் 4,700 ஏக்கர் அரசுக்கு சொந்தமான முந்திரி தோட்டத்தில், ஹெலிகாப் டர் மூலம் எண்டோசல்பான் தெளிக்கப்பட்டது. அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் அதில் விவரிக்கப்பட்டது. 400க்கும் மேலானோர் மடிந்தனர். மலட்டுத் தன்மை எங்கும் பரவிக் கிடக்கிறது. புற்று நோய்களுக்கு ஆளாகி உள்ளனர். குழந்தைகளும், முதியோர்களும் ஊனமாகியுள்ளனர் என்பன போன்ற பாதிப்புகளை பட்டியலிட்டு கூறியது அத்தீர்மானம். அதோடு மேற்குறிப்பிட்ட ஜெனீவா மாநாட்டில் கலந்துகொள்ள உள்ள 29 நாடுகளில் 26 நாடுகள் இதை தடைசெய்துள்ளன என்றும், தடைசெய்யப்பட்ட பட்டியலில் இந்தியாவும் இணைந்திட வேண்டுமெனவும் வேண்டுகோளும் விடுக்கப்பட்டது!

என்றாலும் என்ன? வழக்கம் போல் இந்திய அரசு கேளாக் காதாகவே இருந்தது மட்டுமல்ல; தடைவிதிக்க வேண்டாமென ‘சர்க்குலர்’ ஒன்றை உள்சுற்றுக்கு உலா விட்டது கேவலத்திலும் கேவலம். தனது பன்னாட்டு, உள்நாட்டு கம்பெனிகளின் மீதான ராஜ விசுவாசத்தைக் காட்டி யது வெட்கக்கேடானது மட்டுமல்ல, கண்டிக்கத்தக்கதுமாகும். என்றாலும் மாநாடு தடை விதிக்க தீர்மானித்துவிட்டது. இந்தியா மட்டும் சில வருடங்கள் அவகாசம் கேட்டது அவமானத்திலும் அவமானம். எண்டோசல்பான் மீதான பரிவுக்கும், பாசத்திற்கும் இந்திய ஐ.மு.கூட்டணி அரசு-2 என்ன ‘விலை’ பெற்றதோ தெரிய வில்லை. எண்டோசல்பானின் கோரத் தாண்டவத்தையும், கோர முகத்தையும் அதன் அவதாரத்தையும் சற்றே பார்ப் போமா, ஆண்களது ஆன்ட்ரோஜென் ஹார்மோன் (ஆண்மை உணர்வை தூண்டும்) சுரப்பி பாதிக்கப்படும். அதுபோல் பெண்களது ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் (பெண்மை உணர்வை தூண்டும்) சுரப்பி பாதிக்கப்படும். அதாவது ஆணுக்கும், பெண்ணுக்கும் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும். உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் செயல்திறனின்றி போகும். பெண்கள் மாதவிடாய் சுழற்சியில் பாதிப்பும், நோயும் ஏற்படுத்தும். தாய் உடல்நலம் பாதித்து, அதனால் கருவில் இருக்கும் குழந்தைக்கும் பாதிப்பு ஊடுருவும். பெண்களுக்கு மார்பு புற்றுநோயை உண்டாக்கும். தோலில் இனம்புரியா பாதிப்பு வரும். கல்லீரல் மற்றும் கணையம் பாதிக்கப்படும். கால்நடைகளுக்கும் பாதிப்பு உண்டாகும். குடிநீரும் பாதிக்கப்படும்.

இதனுடைய இதர அவதார பெயர்களை பாருங்கள்: எண்டோசைட், தியோடன், ஹில்டன், எண்டோசெல், என்டா சிட், என்டோசிட், ஹைசல்பான், பாரிசல்பான், தையோனெக்ஸ், பாசர், பென்சோபென் போன்ற பெயர்களில் சந்தையில் விற்கப்படுகிறது. ரூ.3,800 முதல் 4,100 கோடி வரை ஆண்டொன்றுக்கு இதன் வியாபாரம் கொடிகட்டி பறக்கிறது. இதில் இந்தியாதான் முதலிடம்! என்ன கொடுமை இது! உலகம் முழுவதும் 5 கோடி லிட்டர் விற்பதில், இந்தியாவில் மட்டும் 1.25 கோடி லிட்டர் (6 ஆயிரம் கோடி ரூபாய்) விற்கப்படுகிறது. அவ்வளவும் விஷம்! இதன் பாதிப்பு பற்றி இதுவரை 17 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வின் அதிர்ச்சி தரும் விஷ(ய)ம் என்ன வென்றால், இதிலுள்ள குளோர்டென், ஹெப்டாகுளோர், என்ட்ரின், டைல்டிரின் உட்பட பல மருந்துகள் மண்ணில் பயன்படுத்த அருகதை இல்லாதவை. இதை பயன்படுத்தினால் அடுத்த 30 ஆண்டுக ளுக்கு மண்ணில் நிலைத்து நின்று, மனித உயிர்களை காவு கேட்கும். (இதை அமெரிக்கா 1952 லேயே தடைசெய்துவிட்டது என்பதுதான் கூடுதலான செய்தி! இது வரை படிப்படியாக 72 நாடுகள் உலகில் தடைசெய்துள்ளன. இந்தியாவிலும் 2001ல் தடைசெய்யப்பட்டு, மீண்டும் 2004ல் தடைநீக்கப்பட்டுவிட்டது.)

இருந்தாலும், இந்தியாவில் உள்ள இடதுசாரி இயக்கங்களும், தேச நலன் மீது அக்கறை உள்ளவர்களும் எண்டோசல் பானை அவ்வளவு எளிதாக விடுவதாக இல்லை. ஆம்! கேரளாவில் இடது ஜனநா யக முன்னணி அரசு பதவியில் இருந்த போது எண்டோசல்பானுக்கு தடைவிதித்ததோடு மட்டும் நிற்காமல், இந்தியாவின் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கேரள முதல்வராக இருந்த அச்சுதானந்தன் கடிதம் எழுதினார். இது ஜெனீவா மாநாட்டிலும் பிரதிபலித்தது. தில்லியிலும் எதிரொலித்தது. ஆம்! தில்லி உச்சநீதிமன்றத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் எண்டோசல் பானுக்கு தடைவிதிக்க கோரியது. 13.5.2011 அன்று முதல் 8 வாரங்களுக்கு இந்தியாவில் எண்டோசல்பானுக்கு தில்லி உச்ச நீதிமன்றம் தடைவிதித்து, மத்திய அரசின் பதிலையும் கேட்டுள்ளது.

தேசத்தின் நலன் காக்கும், தேச மக்களின் உயிர் காக்கும் இப்பிரச்சனையில், உச்சநீதிமன்றத்தின் இந்த துணிச்சலான இந்த இடைக்கால உத்தரவு பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும். இந்த தடை நிரந்தர மாக்கப்பட வேண்டுமென்றால், கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு செய்ததுபோல இந்தியாவில் உள்ள மாநில அரசுகள் அனைத்தும், “இனியொரு போபால் வேண்டாம்! இனியொரு மினி போபால் (கோழிக்கோடு) வேண்டாம்!” என்று மக்களை திரட்டி, மத்திய அரசிடம் வலுவாக வற்புறுத்த வேண்டும். தங்களது மாநிலங்களில் தடைவிதித்திடவும் வேண்டும். இதிலே சமரசத்திற்கு மாநில அரசுகள் மத்திய அரசுக்கு இடம் கொடுக்கக் கூடாது.

No comments: