Saturday, April 23, 2011

பருவ மாற்றமும் உலக உணவுப் பாதுகாப்பும்

அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புலத்தின் தேசிய வேளாண் புதுமைத்திட்டத்தின் சார்பில் புதிய வேளாண் வாழ்வு ஆதாரங்கள் பற்றிய குறும்படம் வெளி யீட்டு விழாவும், பருவ மாற்றம் மற்றும் உலக உணவுப் பாதுகாப்பும் என்ற தலைப்பில் அண் மையில் சிறப்புரை நடைபெற்றது. இவ்விழா வில் மணிலாவில் உள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் ராபர்ட் ஜீக்ளர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பலநூறு வேளாண் நிபுணர்கள், உழவியல் துறை வல்லுநர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், பல்துறை பேராசிரியர்கள் கலந்துகொண்ட இச்சிறப்புரையில் அவரின் முக்கிய கருத்து கள் நெல் சாகுபடியில் ஏற்பட்டுள்ள புதிய சவால்களை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியது.

நெல் சாகுபடியில் புதிய சவால்கள்

கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக நெல் சாகுபடி பரப்பளவு குறைந்து வரும் நடைமுறைச் சூழல் கவலை அளிக்கிறது. உலக நெல் உற்பத்தியின் தேவை கூடி வரு கின்ற நிலையில் 2035ம் ஆண்டில் 114 மில்லியன் டன்கள் வரை தேவை என்ற நிலையில், நிலம், நீர் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் நெல் சாகுபடியில் இருந்து விலகி வருவது வளரும் நாடுகளில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய உதவாது.

தற்போதைய உற்பத்திச் சூழலை நீடிக்கச் செய்யவே அதிகப்படியான நெல் உற்பத்தி யில் ஈடுபட வேண்டியது அவசியம். இந்தியா வில் தேவையான அளவு நெல் உற்பத்தி இல் லையென்றால் உலகின் உணவுப்பாதுகாப்பே கேள்விக்குறியாகிவிடும். குறிப்பாக பருவ மாற்றம் காரணமாக கடலின் உயரம் அதிகரிக் கும். மழையின் அளவில் பெரிய மாறுபாடுகள் மற்றும் வெப்பத்தின் அளவும் அதிகரிக்கும் போது நெல்லின் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறன் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இத்த கைய நடைமுறைச் சூழலில் பருவ மாற்றத் திற்கு ஏற்ப புதிய வறட்சி மற்றும் கடும் வெள் ளம், புயலை தாங்கி வளரும் எதிர்ப்பு ரக உற் பத்தியில் ஈடுபட வேண்டியது அவசியம். தற் போது சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையம் உலகின் மிகப் பெரிய மரபணு செல்வங்களை பாதுகாத்து வரும் சூழலில் பூச்சி மற்றும் நோய்த்தாக்குதல், சீதோஷ்ண சூழலை தாங்கி வளரும் புதிய நெல் ரகங்களை வேளாண் நிபுணர்கள் உருவாக்க தேவையான விதை ரகங்களை வழங்கி, வேளாண் ஆராய்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தி வருகிறது. குறிப் பாக இரவில் வெப்பத்தின் அளவு 1 டிகிரி செல்சியஸ் அளவில் கூடும்போது நெல் உற் பத்தி 10 சதவீதம் வரை குறைவதாக வேளாண் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. சுமார் 100 சதவீதம் வரை மகரந்தச் சேர்க்கை பாதிக்கப் படும் நடைமுறைச் சூழலில் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை பாதுகாக்கவும், மழையின் அளவு மாறுபடும் போது உற்பத்தி மற்றும் உற் பத்தித் திறனை பாதுகாக்கும் நோக்கில் புதிய உழவியல் தொழில்நுட்பங்கள் உருவாக்கப் பட்டு வருவதாக தெரிவித்தார். தற்போது உள்ள நெல் சாகுபடி முறையில் உள்ள பாரம்பரிய நீர்ப்பாசன முறையில் மாற்றம் செய்து நெல் பயிரின் வேர்களுக்கு மட்டும் தண்ணீர் பாசனம் உள்ளது போன்ற புதிய வேளாண் தொழில் நுட்பங் கள் வாயிலாக நெல்லின் உற்பத்தி, உற்பத்தித் திறன் பாதுகாக்கப்படுவ தாக தெரிவித்தார்.

கடல் சார் நெல் விவசாயம்

தற்போது கடலின் அளவு மட்டம் பெருகி வரும் பருவ மாற்றச் சூழலில் 2050ம் ஆண்டுக ளில் 50 சதவீதம் நெல் உற்பத்தியை தந்து வரும் டெல்டா நிலங்களை கொண்ட வள ரும் நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் என் றார். அதற்கு ஏற்ப மாறிவரும் சூழலில் உப்புத் தண்ணீரில் வளரும் புதிய ரக நெல்லை உரு வாக்கும் முயற்சியில் வேளாண் விஞ்ஞானி கள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். புதிய ரக உற்பத்தியில் விவசாயிகளை ஈடு படுத்தி மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெற்று வருவதாகவும் விவசாயிகளிடையே ஏற்படும் வேளாண் விரிவாக்க முயற்சிகள் ஆக்கப்பூர்வமான பலன்களை தரும் நடை முறைச் சூழலில் தற்போது சிறு விவசாயிகள் இயற்கை சீற்றங்களில் இருந்து பாதிக்காமல் தவிர்க்க சுவர்ணா 1 நெல் ரகம் இந்தியாவில் 2009ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு விவ சாயிகளின் வயல்களில் வேளாண் நிபுணர் களால் சோதிக்கப்பட்டு வருகிறது. தற்போ தைய பருவ மாற்றத்தின் காரணமாக பாதிக் கப்படுவது வளரும் ஆசிய நாடுகளின் ஏழை சிறு மற்றும் குறு விவசாயிகள் என்று தெரி வித்த ராபர்ட் ஜீக்ளர், தற்போதைய நெல் மற்றும் மக்காச்சோளம் மாறி மாறி பயிரிடும் விவசாயிகளின் சாகுபடி முறை காரணமாக நிலத்தின் இயற்கை வளம் குறைந்து வருவ தாகவும் தெரிவித்தார். தங்க அரிசி (ழுடிடனநn சiஉந) வாயிலாக ஊட்டச்சத்து குறைபாடுகளை குழந்தைகளிடம் குறைக்கும் முயற்சிகள் வெற்றி பெற்று வருவதாகவும் வைட்டமின்-ஏ சத்துக்களை இயற்கை முறையில் கிடைக் கச் செய்வது குறித்த ஆராய்ச்சிகளை சர்வ தேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் மேற் கொண்டு வருவதாக தெரிவித்தார். தற்போ தைய வேளாண் கொள்கைகள் குறுகிய கால தேர்தல் பலன்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதாகவும், நீண்ட கால வளர்ச்சி மற்றும் வேளாண் உற்பத்திது திறன் பெருக்கத்திற்கு நெல் ஆராய்ச்சி பணிகளை நீண்டகால அளவில் மேற்கொள்ளவும் உல கின் உணவுத் தேவையை நிறைவு செய்ய பொதுத்துறை வேளாண் முதலீடுகள் ஒரு முக்கியத் தேவையாக உருவாகிவிட்டதாக வும் தெரிவித்தார்.

தற்போது நெல் சாகுபடி முறையில் ஒரு வருடத்தில் அதிகளவு சாகுபடிப் பணிகளை மேற்கொள்வது பாரம்பரிய நெல் சாகுபடி பகுதிகளில் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் பெருக்கத்திற்கு காரணமாகிவிட்டதாகவும், தடுப்பு பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளும் பல வேளாண் பிரச்சனைகளுக்கு காரணமாகி விட்டதாகவும், நீண்ட கால பொதுத்துறை வேளாண் ஆராய்ச்சிகள் வாயிலாக இப்பிரச் சனைகளுக்கு நல்ல தீர்வுகள் கிடைக்கும் என்றார்.

எனவே ஒரு வலிமையான இந்தியாவை உருவாக்கவும், நெல் விவசாயிகளின் நலன் களை பாதுகாக்கவும் தேவைப்படும் உழவி யல் மற்றும் வேளாண் விஞ்ஞானிகளை உரு வாக்க தற்போதைய வேளாண் கட்டமைப்பு களுக்கு தேவையான பயிற்சிகளை, தொழில் நுட்ப உதவிகளை சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் வழங்கும் என்றும் தெரிவித்தார். தற்போதைய நிகழ் மற்றும் எதிர்காலத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து புதிய தலைமுறை வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் புதிய ரகங்களை உருவாக்கும் வேளாண்மை முயற்சிகள் தொடரும் என்றார்.

வேளாண் கலந்துரையாடல்

அண்ணாமலைப் பல்கலைக்கழக பேரா சிரியர்கள், வேளாண் வல்லுனர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், முன்னோடி விவசாயிகள், முனைவர் ராபர்ட் ஜீக்ளரிடம் பல கேள்விகள் கொண்ட கலைந்துரையாடல் நிகழ்ச்சி பின்பு நடைபெற்றது. விஞ்ஞானிகளின் பல சந்தேகங் களுக்கு தனது பதிலில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட நெல் ஆராய்ச்சிப் பணிகளை சர்வதேச நெல் ஆராய்ச்சி மையம் மேற் கொள்ள வில்லை என்றும் சீனா நெல் ஆராய்ச்சியாளர்கள் இப்புதிய வேளாண் பணி களை மேற்கொண்டு வருவதாகவும் தெரி வித்தார். பின்னர் நீரழிவு நோயாளி களுக்கு உரிய நெல் ரக ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் வெகு விரை வில் புதிய ரக மருத்துவ குணமுள்ள நெல் ரகங்களை உருவாக்கவும் முயற்சிகள் செய்து வருவதாகவும் தெரிவித்தார். அண்ணா மலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் மருத்துவர் ராமநாதன், பல துறைத் தலை வர்கள், புல முதல்வர்கள் கலந்துகொண்ட இவ்விழாவின் ஏற்பாடுகளை தேசிய வேளாண் புதுமைத் திட்டத்தின் சார்பில் உழவியல்துறைத் தலைவர் முனைவர் கதிரேசன் தலைமை யிலான விஞ்ஞானிகள் குழு சிறப்பாக செய் திருந்தது.

(ராபர்ட் ஜீக்ளர், தலைவர், சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம், மணிலா.)

No comments: