Tuesday, March 8, 2011

சூரியனின் கரும்புள்ளிகள் எப்படி இயங்குகின்றன?

சூரியனில் உருவாகும் கரும்புள்ளிகளின் இயக்கம் மற்றும் சூரியப் புயல் குறித்த சந்தேகத்திற்கு இந்தியர் தலைமையிலான நாசா விஞ்ஞானிகள் குழுவினர் விடை கண்டுள்ளனர்.

கொல்கத்தாவில் செயல்பட்டுவரும் அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்தவர் திபெந்து நந்தி. இவர் நாசா நிறுவனத்துடன் இணைந்து சூரிய வலிமையான மின்காந்தப் பகுதிகளான கரும்புள்ளிகள் குறித்த ஆய்வில் கலந்துகொண்டார். அந்தக் குழுவினர் சூரியக் கரும்புள்ளிகள் இயக்கம் குறித்த கணினி மாதிரியை வடிவமைத்துள்ளனர். இதன் மூலம் சூரியனில் எப்போதெல்லாம் காந்தப்புயல்கள் ஏற்படும், கரும்புள்ளிகள் எப்போது தோன்றும் என்பதை கணிக்க மனிதர்களால் முடியும். இந்த ஆராய்ச்சியின் அடுத்தடுத்த கட்டங்கள் விமானப்போக்குவரத்து மற்றும் பல்வேறு பூகோள இயக்கங்கள் குறித்த செயல்பாடுகளில் முன்னேற்றத்தை உண்டாக்கும். இந்த கண்டுபிடிப்பு வான்வெளி தட்ப வெப்பம் குறித்த அறிவை மேலும் மேம்படுத்துவதாக இருக்கும் என “நேச் சர்” என்ற அறிவியல் மாத இதழ் புகழ்ந்துள்ளது.

இதுகுறித்து ஆராய்ச்சிக் குழுவின் தலைவர் நந்தியிடம் செய்தியாளார்கள் கேட்டபோது. “உங்களுக்கு தெரியுமா விண்வெளியில் இருக்கும் தட்ப வெட்ப நிலையும் பூமியில் இருப்பதைப் போலவே இருக்கும். சூரியப் புள்ளிகள் எனப்படும் கருப்பு பகுதிகள் விண்வெளியின் தட்ப வெட்பத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். பூமியின் சுற்றுவட்டத்தில் இப்படியான மாற்றத்தைச் செய்வதன் மூலம் புவியின் சூழலில் இவை மாற்றத்தை உண்டாக்குகின்றன” என்றார் நந்தி.

“எனவே விமான ஓட்டிகள் குறைந்த எரிபொருள் செலவில் செல்லவிரும்பினால், இந்த வகையில் பாதுகாப்பான வழிகளை ஆய்வு செய்து பயணிக்க முடியும்” என்று அவர் தெரிவித்தார்.

No comments: