Thursday, December 2, 2010

வெற்றிலையின் மகத்துவம்

ஓராண்டுக்கு முன் வெற்றிலை இறக்குமதியை துபாய் தடை செய்தது. வெற்றிலையில் சுண்ணாம்பு தடவி, பாக்குத் தூள், புகையிலை சேர்த்து மென்றுவிட்டு கண்ட இடங்களில் மக்கள் துப்புவதைத் தடுக்கவே துபாய் அரசு இம்முடிவை எடுத்தது. நம் நாட்டிலும் வெற்றிலைச் சாற்றை நட்டநடு வீதியில் துப்பும் காட்சி நமக்குப் பழகிப்போன ஒன்றுதான். இதனால் பெயர் கெட்டதென்னவோ வெற்றிலைக்குத்தான்.

மதித்துப் போற்றப்படும் இலை

ஆனால் பாக்கையும் புகையிலையையும் விடுத்து, வெற்றிலையை மட்டும் எடுத்துக் கொண்டால் அது தெற்காசியாவிலும் தென்கிழக்கு ஆசி யாவிலும் மிகவும் மதித்துப் போற்றப்படும் ஓர் இலை. மதச் சடங்குகளில் மட்டுமல்ல, வியாபார அல்லது தொழில் ஒப்பந்தங்களில் கூட வெற்றிலை மாற்றிக் கொள்வது என்பது புனிதமான ஓர் இடத்தைப் பெற்றுள்ளது. 4600 ஆண்டுகளுக்கு முந்தைய ஹரப்பா நாகரிக காலத்திலேயே மக்கள் வெற்றிலையைப் பயிரிட்டுப் பயன்படுத்தியதற்கான சான்று உள்ளது. வேதகாலத்திலும் இது தொடர்ந்தது. புகழ்பெற்ற இந்திய மருத்துவர்கள் சுஸ்ருதாவும் சரகாவும் வெற்றிலையின் நன்மைகள் பற்றி எழுதியுள்ளனர். பனாரஸ், கேரளா, மைசூர், கும்பகோ ணம், ஒரிசா. டாக்கா போன்ற இடங் களில் விளையும் ரகரகமான வெற்றி லைகள் பற்றி நாட்டுப்புறப் பாடல்கள் உண்டு.

புற்றுநோய்க்குக் காரணம் வெற்றிலை அல்ல

கண்ட இடங்களில் துப்பப்படுவதால் மட்டுமின்றி, வாயில் புற்றுநோய் வருவதற்கு வெற்றிலை ஒரு காரணம் என்று நம்பப்பட்டதாலும் வெற்றிலையின் மகத்துவம் பின்னர் குறைந்தது. அண் மையில் கரக்பூர் ஐ.ஐ.டி.யைச் சேர்ந்த முனைவர் பி. குப்தா, லக்னோவைச் சேர்ந்த நிக்கில் குமார் ஆகிய இருவரும் ஆசியாவில் இந்த பச்சைத் தங்கத்தைப் பயிரிடுவது குறித்தும் அதன் மருத்துவ குணங்கள் பற்றியும் ஆய்வுக் கட்டுரைக ளை சமர்ப்பித்துள்ளனர். மும்பை புற்று நோய் மையத்தைச் சேர்ந்த டாக்டர் எஸ்.வி. பிடேவும் அவரது சக ஆராய்ச்சி யாளர்களும் வாயில் புற்றுநோய் வரு வதற்கு சிலவகை பாக்குத் தூள்களும் புகையிலையும்தான் காரணமே தவிர வெற்றிலை அல்ல என்று கண்டுபிடித்து அதை குற்றச்சாட்டிலிருந்து விடுவித்துள் ளனர். வெற்றிலையோடு வாசனைக்காக ஏலம், கிராம்பு, ரோஜா இதழ் போன்ற வற்றைச் சேர்த்துக் கொள்ளலாம்.

தற்போதைய ஆய்வு முடிவுகளின்படி, வெற்றிலையை வாயில் போட்டு மெல்லும் போது அது மூச்சுக்காற்றுக்கு புத்துயிர் அளித்து வாயைச் சுத்தப்படுத்துகிறது. வெற்றிலைச் சாற்றில் அடங்கியுள்ள சத் துக்கள் ரத்தத்தில் நேரடியாகக் கலக்கக் கூடியவை. வயிற்றில் ஜீரணமாகி பின்னர் ரத்தத்தில் கலப்பதற்கு மாறாக உள்ள வெற்றிலையின் இந்த குணம் சில மருந்து களை வெற்றிலையுடன் சேர்த்துக் கொடுப்பதற்கு வசதியாக அமைகிறது.

வெற்றிலையை மென்றவுடன் வாயில் உமிழ்நீர் சுரப்பது அதிகரிக்கிறது. நுண் கிருமிகள் வளர்வதைத் தடுக்கும் புரோட் டீன்கள் உமிழ்நீரில் உள்ளன. பற்களில் காரை படிவதைத் தடுக்க இது உதவு கிறது. ஜீரண சக்தியைக் கொடுக்கவும் தொண்டைப் புண், ஜலதோஷம் போன்ற வற்றுக்கு நிவாரணம் அளிக்கவும் வெற்றிலையைப் பயன்படுத்தலாம். அது மட்டுமல்ல, இதயத் துடிப்பை முறைப்படுத் தவும் ரத்தக் குழாய்களை தளர்வடையச் செய்து ரத்த ஓட்டத்தை சீராக்கவும் கூடிய வேதிப்பொருட்கள் வெற்றிலைச் சாற்றில் உள்ளன. வலி நிவாரணத்திற்கும் வீக்கத் தைக் கட்டுப்படுத்துவதற்கும் வெற்றிலை யில் உள்ள பாலிஃபீனால்கள் என்ற வேதிப் பொருட்கள் உதவுகின்றன. வயிற் றுப் புண்ணைத் தடுக்கவும் காயங்களைக் குணப்படுத்தவும் வெற்றிலையைப் பயன் படுத்த முடியும் என்பது ஆயுர்வேத மருத் துவம் தோன்றிய காலத்திலேயே இந்தியர் களுக்குத் தெரிந்திருந்தது. நிக்கில் குமாரின் தற்போதைய ஆய்வுகளும் அதை உறுதிப்படுத்துகின்றன.

ஒரு காலத்தில் புற்றுநோயை உரு வாக்கக்கூடியது என்று கருதப்பட்ட வெற் றிலைக்கு புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் குணம் உண்டு என்ற தற்போதைய கண் டுபிடிப்பு ஒரு வினோதமான மீட்சிதான். எப்படியாகினும், மருத்துவ குணம் உடைய பல வேதிப்பொருட்கள் வெற்றிலையில் உள்ளன என்பது இன்று தெளிவாகி விட்டது. வெற்றிலையில் உள்ள மூலக் கூறுகளைப் பிரித்து அவற்றின் குணங் கள் பற்றிய ஆய்வுகள் தொடர்கின்றன. எதிர்காலத்தில் மேலும் பல விவரங்கள் நமக்குக் கிடைக்கலாம்.

“வெத்திலையைப் போட்டேண்டி, சக்தி கொஞ்சம் ஏறுதடி” என்று எழுதிய கவிஞர் எதை நினைத்து எழுதினாரோ தெரியவில்லை. ஆனால் அந்தப் பாடல் வரிகளுக்கு ஆழமான பொருள் உண்டு என்பதை அறிவியல் ஆய்வுகள் தெரிவிக் கின்றன.

ஆதாரம் : தி இந்துவில் திரு டி. பாலசுப்பிரமணியன் எழுதியுள்ள கட்டுரை

No comments: