விளைச்சலை நம்பி வாழ்க்கை நடத்துபவர்களுக்கு பெரிய நஷ்டம் வந்து மீண்டும் எழவேண்டுமானால், அதற்கு பொறுமையும் புத்திசாலித்தனமும் வேண்டும். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த திரு. ரவிஷங்கருக்கு இவை இரண்டுமே இருந்ததால், தோல்வியை வெற்றியாக மாற்றிக் கொண்டார். 10 ஆண்டுகளுக்கு முன் மிளகு பயிரிட்டதில் அவருக்குக் கடுமையான நஷ்டம் ஏற்பட்டது. மொத்த விளைச்சலையும் நோய் தாக்கியதின் காரணமாக இழந்த அவர், நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மிளகுப் பயிரை உருவாக்கி இன்று வெற்றியடைந்திருக்கிறார்.
முதலில் பன்னியூர், கரிமுண்டா, வயநாடு போன்ற உள்ளூர் மிளகு வகைகளையே அவர் பயிரிட்டு வந்தார். பயிரை இழந்தபோது பூச்சிகளின் காரணமாக பயிர் அழிந்துவிட்டதாக முதலில் கருதினார். பின்னர்தான் மிளகுப் பயிரைப் பொதுவாகப் பீடிக்கும் ஒரு நோயின் கார ணமாக அது அழிந்துவிட்டதென்று புரிந்தது. இந்த நோயைத் தாக்குப் பிடிக்கக் கூடிய பயிர் வகையினைக் கண்டுபிடிக்க அவர் முதலில் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. மிளகு போன்ற ஹிப்பாலி என்ற பயிரையும் பன்னியூர் வகையையும் சேர்த்து ஒரு புதிய கலப்பினப் பயிரை உருவாக்கினார். இப்படி உருவாக்கப்பட்ட கலப்பினப் பயிர்களைத் தோட்டத்தில் வளர்த்தபோது அவை அனைத்துமே நோயைத் தாக்குப் பிடித்து நன்கு வளர்ந்ததைக் கண் டார். இந்தக் கலப்பினப்பயிரில் விளையும் மிளகில் நோய்க் கிருமிகளை அழிக்கும் தன்மை அதிகமாக இருந்தது.
“பூ விட்டபிறகு எட்டு மாதங்கள் கழித்து பழுக்க ஆரம்பிக்கும். இரண்டு ஆண்டுகளில் நல்ல விளைச்சலைக் கொடுக்கும்... இரு பயிர்களை ஒட்டவைத்த பிறகு அவற்றின் ஆரோக் கியமான வளர்ச்சிக்கு நிழலில் வைத்துப் பராமரிக்க வேண்டும். எல்லாப் பயிர்களும் ஜூன் மாதத்தில் பூ விடத் தொடங்கும். ஓராண்டுக்கொரு முறை அறுவடை செய்து கொள்ளலாம்” என்கிறார் ரவிஷங்கர்.
சிமெண்ட்டிலான தேன் கூடுகள்
மிளகில் புதிய வகையைக் கண்டுபிடித்தது மட்டுமல்ல, தேனீ வளர்ப்பிலும் சிமெண்ட்டி லான தேன் கூடுகள் செய்து புதுமையைப் புகுத்தினார் ரவிஷங்கர். இந்தியாவில் தேன் கூடுகள் பொதுவாக மரத்தினால் செய்யப்படு கின்றன. பருவமழைக் காலங்களில் மரத்தினா லான கூடுகள் விரைவில் சேதமடைந்துவிடும். இந்தப் பிரச்சனையைச் சமாளிப்பதற்கும் மரங்கள் வெட்டுப்படாமல் பாதுகாக்கப்படுவ தற்கும் சிமெண்ட்டிலான தேன்கூடுகளை அவர் உருவாக்கினார். தேன்கூடுகளை குள விகள் தாக்கும் பிரச்சனை சிமெண்ட் கூடுக ளில் எழுவதில்லை. அத்தோடு சிமெண்ட் கூடுகள் வெய்யிலையும் மழையையும் தாக்குப் பிடிக்கக்கூடியவை. அவற்றின் எடை அதிக மாக இருப்பதால் எளிதில் அவை திருட்டுப் போவதில்லை. மேலும், மரக்கூடுகளைப் போலன்றி சிமெண்ட் கூடுகள் கரையான்கள், புழு பூச்சிகள் மற்றும் தீப்பிடித்தல் போன்ற ஆபத்துகளிலிருந்தும் பாதுகாப்பை அளிக் கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக சிமெண்ட் கூடுகள் மரக்கூடுகளைவிட மலிவானவை. நீடித்து உழைப்பவை. தேனீக்கள் இவற்றில் எளிதாகக் குடிபுகுந்துவிடுகின்றன. ஒரு சிமெண்ட் பெட்டி சுமார் 250 ரூபாய்க்குக் கிடைக்கும்.
மேற்கொண்டு தகவல் வேண்டுவோர் திரு. ரவிஷங்கரை 99727 15411-ல் தொடர்பு கொள்ளலாம்.
ஆதாரம் : ‘தி இந்து’ ஏப்ரல் 15, 2010
Courtesy: Theekkathir
No comments:
Post a Comment