Thursday, July 29, 2010

அறிவியல் கதிர்

எய்ட்ஸ் நோய் குழந்தைகளுக்குப் பரவாமல் தடுக்க மருந்து

எச்.ஐ.வி.யினால் பீடிக்கப் பட்ட பெண்ணிடமிருந்து குழந் தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது-கர்ப்பமுற்ற காலத்தில்-பிரசவ வலி எடுத்து குழந்தை பிறக் கும் போது.. என எப்போது வேண் டுமானாலும் எச்.ஐ.வி. வைரஸ் பரவக் கூடியது. ஆப்பிரிக்கக் கண் டத்திலுள்ள போட்ஸ்வானா நாட்டில் கர்ப்ப முற்ற பெண்கள் மற்றும் தாய்ப் பால் கொடுக்கும் பெண்களிடம் அண்மையில் நடத்தப்பட்ட சர்வ தேச ஆய்வில் 99 சதத் தாய்மார்களி டமிருந்து அவர்களது குழந்தை களுக்கு எச்.ஐ.வி. பரவாமல் தடுக்க முடியுமெனக் கண்டறியப்பட்டிருக் கிறது. பொது சுகாதாரத்திற்கான ஹார்வர்டு மையம் இந்த ஆய்வி னைத் தலைமை யேற்று நடத்தியது. ஆப்பிரிக்காவில் இதற்கு முன் தாயி டமிருந்து குழந்தைக்குப் பரவாமல் தடுக்க நடத்தப்பட்ட பரிசோதனை களில் இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்ததில்லை என்கிறார் தலை மை மருத்துவர் ரோஜர் ஷபிரோ (தகவல் : தி இந்து).

எச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்ட 730 பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. கர்ப்பமுற்ற காலத் திலேயே எச்.ஐ.வி. வைரஸ் பரவாமல் தடுக்கக் கூடிய பல்வேறு மருந்து வகைகள் கொடுக்கப்பட்டன. ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுக் கப்பட்ட குழந்தைகளுக்கு தாயிட மிருந்து பரவும் விகிதம் 1.1 சதமாகக் குறைந்துள்ளது. முன்னர் நடத்திய சோதனைகளில் இந்த விகிதத்தை 5 சதவீதத்திற்குக் கீழ்க்கொணர முடிந்ததில்லை. சிகிச்சையே அளிக் கவில்லையெனில் குழந்தைகளுக் குப் பரவும் விகிதம் 25 சதமாக இருந்தது. ஆப்பிரிக்காவின் மற்ற பகுதிகளைவிட தெற்குப் பகுதியில் எச்.ஐ.வி பரவுவது 3-லிருந்து 5 மடங்கு அதிகமாகவும், உலகின் மற்ற பகுதிகளைவிட 100 மடங்கு அதிகமாகவும் உள்ளது. எனவே, அண்மையில் நடத்தப்பட்டுள்ள ஆய்வு எய்ட்ஸ் நோயாளிகளுடைய எதிர்காலத் தலை முறையாவது கொடிய நோயி லிருந்து தப்பிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்ப தில் நாம் மகிழ்ச்சியடையலாம்.

இரண்டு கற்களை ஒன்றோடொன்று மோதவிடும்போது தீப்பொறிகள் உண்டாவதேன்?

இரண்டு கற்கள் வேகமாக மோதும் போது, கற்கள் சந்திக்கும் புள்ளியில் மோத லின் மொத்த சக்தியும் குவிந்திருப்ப தால் அந்த இடம் சூடாகிவிடும். கல்லிலிருந்து மிகச் சிறிய சூடான ஒரு துகளைப் பிய்த்தெ றியப் போதுமான அளவு இந்த மோதல் இருக்கும். அந்தத்துகள் ஏராளமான சக்தி யுடனும் வேகத்துடனும் செல்லத் தொடங் கும். காற்றுடன் ஏற்படும் உராய்வினால் அத் துகள் மேலும் சூடாகும். வெப்பமடைந்த அத் துகள் காற்றிலுள்ள ஆக்ஸிஜனுடன் வேதியி யல் வினை புரிந்து பிரகாசமான பொறியாக எரியத் தொடங்கும்.

வெளிப்படும் தீப்பொறி மோதும் கற் களின் தன்மையைப் பொறுத்தது. மிகக் கடி னமான கற்களாக இருப்பின், மோதலின் கார ணமாக துகளைப் பிய்த்தெறிய சக்தி போது மானதாக இருக்காது. கற்கள் மிருதுவான வையாக இருப்பின், மோதலின் காரணமாக அவை பல துண்டுகளாக உடைந்துவிடும். எந்தத் துண்டுமே பற்றியெரியக் கூடிய அளவு வெப்பமடைந்திருக்காது. கல்துகள்களின் வேதியியல் உள்ளடக்கம் எளிதில் ஆக்ஸிஜ னுடன் சேர்ந்து வினை புரியக் கூடியதாக இருக்க வேண்டும். ஃப்ளிண்ட் (கடiவே) கற்கள் சரி யான கடினத்தன்மையுடனும் ஆக்ஸிஜனு டன் சேரக் கூடிய வேதியியல் தன்மையுட னும் இருப்பதால் அவை மோதும்போது தீப்பொறிகள் உண்டாகின்றன.

மாரடைப்பு ஆபத்து குறைய...

மத்தியதரைக் கடலைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் உணவு மாரடைப்பு ஆபத்தைப் பெருமளவுக்குக் குறைத்துவிடும் என சமீபத்திய ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

மீன், பழங்கள், காய்கறிகள், பட்டாணி-பீன்ஸ் வகைகள், கொட்டை வகைகள், தானியங்கள், ஆலிவ் எண்ணெய், கொஞ்சமாக ஆல்கஹால் ... இதுவே அவர்களது உணவு. அத்தோடு அவர்களது உணவில் இறைச்சி-பால்பொருட்கள் போன்றவற்றில் உள்ள கொழுப்புச் சத்து குறைவாகவே இருக்கும்.

மேலை நாட்டு உணவை எடுத்துக் கொள்பவர்களைவிட மேற்கண்ட உணவை எடுத்துக் கொள்பவர்களின் இதயத் துடிப்புகளின் கால இடைவெளி அதிகமாக இருப்பதையும் அது ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு திடீர் மரணம் நிகழ்வதை வெகுவாகக் குறைத்துவிடுவதையும் ஆய்வுகள் எடுத்துக் காட்டியுள்ளன. ஒரே மாதிரியான ஆண் இரட்டையர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வை பெண்களிடமும் வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த மக்களிடமும் நடத்த வேண்டியுள்ளது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments: