பொருளின் நீளம் மாறாதது அல்ல : வெப்பநிலை மாறாதவரை ஒரு பொருளின் நீளம் மாறாது என்பது பழைய இயற்பியல். ஆனால் ஒளியின் வேகத்தை ஒட்டிய வேகத்தில்-அதாவது அதிவேகத்தில்-ஒரு பொருள் பயணிக்குமானால் அதன் நீளம் சுருங்கும் என்பது நவீன இயற்பியல். இக் கருத்தை முன்மொழிந்தவர் ஏ. எச். லாரன்ஸ். அதே சமயம், ஒரு பொருளின் பொருண்மை அதிவேகத்தில் பயணிக்கும்போது அதிகரிக்கும். அப்படி நீளமும் பொருண்மையும் மாறுமானால், மற்ற இயற்பியல் கூறுகளும் ஏன் மாறக்கூடாது என்று ஐன்ஸ்டீன் சிந்தித்ததின் விளைவாகவே சிறப்பு சார்பியல் தத்துவம் உருவானது.
கால ஓட்டம் குறையும் : அதே போல, ஒளி யின் வேகத்தை ஒட்டிய வேகத்தில் செல்லும் ஒரு ரயில் பெட்டிக்குள் இருக்கும் பயணிக்கு ஒரு நிகழ்ச்சி நடைபெற எவ்வளவு காலம் பிடிக்கிறதோ, அதைவிட தரையில் நிற்கும் பார் வையாளருக்கு அதிக காலம் பிடிக்கும் ! இந்த வேகத்தில் ஒருவர் சிறிது காலம் பயணித்து விட்டு பூமிக்குத் திரும்பினால், அவர் இளமை யாக இருப்பார்..நமக்கு வயதாகியிருக்கும் !
பொது சார்பியல் தத்துவம் : மிக அதிக மான நிறை உள்ள பொருட்களின் அருகில் ஒளி செல்லும்போது ஒளியின் பாதை நேர் கோட்டிலிருந்து விலகி வளையும். ஒளி ஒரு சக்தி என்றாலும் அது ஈர்ப்பு விசைக்கு உட்பட வேண்டும் என்பது ஐன்ஸ்டீனது பொது சார் பியல் தத்துவம். 1907ஆம் ஆண்டிலிருந்து 1915 வரை ஒன்பது ஆண்டுகள் முயற்சி செய்து ஐன்ஸ்டீன் இக்கோட்பாட்டினை உருவாக்கினார்.
எடிங்டனின் ஆய்வு : 1919 நவம்பர் 7 அன்று ஐன்ஸ்டீன் உலக மேதையாக அறியப் பட்ட நாள். அன்றுதான் ஐன்ஸ்டீனின் தீவிர ஆதரவாளர் ஆர்தர் எடிங்டன் சூரியனுக்கு அருகில் செல்லும் ஒளி ஈர்ப்பு விசையால் கவ ரப்பட்டு நேர்பாதையிலிருந்து சற்று விலகும் என்ற தன் பரிசோதனை முடிவை வெளியிட் டார். இது ஐன்ஸ்டீன் கோட்பாட்டுரீதியாக வெளியிட்ட பொது சார்பியல் தத்துவத்தை பரிசோதனை மூலம் நிறுவியது.
ஆற்றலும் பருப்பொருளும் ஒன்றின் இரு வடிவங்களே: ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த நு= அஉ2 என்ற சமன்பாடு மிகவும் பிரபலமானது. இங்கு நு என்பது ஆற்றல். அ என்பது பொருண்மை. உ என்பது ஒளியின் வேகம் (விநாடிக்கு 3,00,000 கி.மீ.) ஆற்றலையும் பொருண்மையையும் ஒன்றி லிருந்து மற்றொன்றாக மாற்ற முடியும் என்பதை சுருக்கமாகச் சொல்வதுதான் இந்த சமன்பாடு. சிறு துகளை அழித்தாலே, ஏராளமான அளவில் சக்தி வெளிப்படும் என்பதை இந்த சமன் பாட்டின் மூலம் தெரிந்துகொள்ள முடியும். அணுஉலை முதல் அணுகுண்டு வரை இயங்குவது இந்த சமன்பாட்டின் அடிப் படையில்தான்.
ஐன்ஸ்டீனின் பிற பரிமாணங்கள்
சோசலிசத்திற்கு ஆதரவு-போருக்கு எதிர்ப்பு : அறிவியல், தத்துவம் குறித்த நூல்களைப் படித்து நண்பர்களுடன் விவாதிப்பது ஐன்ஸ்டீனுக்கு மிகவும் பிடித்தமானது. பிரெட்ரிக் ஆட்லர் என்பவருடன் ஏற்பட்ட நட்பினால் சோசலிசம், போர் எதிர்ப்பு, உலக சமாதானம் பற்றிய புதிய பார்வைகள் அவருக்குக் கிடைத்தன. சுரண்டல் கொள்கையினால் மக்களை வறுமையிலும் அறியாமையிலும் தள்ளும் முதலாளித்துவத்தை அவர் வெறுத்தார். கொள்கையளவில் ஏற்றுக் கொண்டதோடு மட்டுமின்றி, சோசலிசமே விஞ்ஞான யுகத்திற்குப் பொருந்தும் சமூக அமைப்பு என்று பிரச்சாரமும் செய்தார்.
ஐன்ஸ்டீனும் கடவுளும் : இந்த பிரபஞ்சத்தில் அடங்கி யுள்ள அத்தனைக்கும் உள்ள தொடர்பைக் கண்டு ஐன்ஸ்டீன் பிரமித்தார். “இந்த உலகை-இயற்கையை எவ்வளவு தூரம் புரிந்து கொள்ள முடியுமோ, அந்த அளவு வியந்து போற்றலாம், மதிக்கலாம்.. இயற்கைதான் என் மதம், என் கடவுள்.. பாராட்டிப் பரிசு கொடுக்கவும் தண்டிக்கவும் வல்ல ஒரு கடவுளை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க இயலவில்லை”என்றார் அவர். இனவெறி, தேசவெறி கொண்ட விஞ்ஞானிகள் அவர் மீது விஷத்தைக் கக்கினர். ஐன்ஸ்டீன் நம்பகமானவர் அல்ல என்று அமெரிக்க உளவு அமைப்பு கருதியது. உளவு அமைப்பின் தீவிரக் கண்காணிப்பில் அவரை இறுதி வரை வைத்திருந்தது.
மக்களைக் கவர்ந்த விஞ்ஞானி : அவர் சிறந்த விஞ்ஞானி மட்டுமில்லை ; விஞ்ஞான அறிவை மக்களிடையே பரப்பும் பிரச்சாரகராகவும் இருந்தார். ஐன்ஸ்டீனின் ஒளிமின் விளைவு கண்டுபிடிப்பிற்காக அவருக்கு 1922 ஆம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசு அளிக்கப் பட்டது. 1955 ஏப்ரல் 18 அன்று அந்த மாமனிதர் இயற்கை எய்தினார். அவர் கடைசியாக எழுதிய கடிதத்தில் உலக அமைதிக்காக, உலக நாடுகள் அனைத்தும் அணு ஆயுதங்களை ஒழிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். ஐன்ஸ்டீனை இருபதாம் நூற்றாண்டின் சிறந்த மனிதர் என்று ‘டைம்’ பத்திரிகை தேர்வு செய்தது. அணு ஆயுதங்களை உலகிலிருந்து முற்றாக அழிப்பதே அந்த மாமனிதருக்கு மனிதகுலம் செலுத்தும் பொருத்தமான அஞ்சலியாக இருக்கும்.
No comments:
Post a Comment