Wednesday, March 31, 2010

நானோ தொழில் நுட்பத்திற்கு வயது 25

1965-ல் நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் ரிச்சர்டு பி. ஃபேன்மென் (1918-1988) 50 ஆண்டுகளுக்கு முன் (1959 டிசம்பர் 29 அன்று) பொருட்களை அணுஅணுவாகச் சேர்க்கும் நானோ தொழில்நுட்பத்தைப் பற்றி அறிமுகம் செய்து உரையாற்றினார். பேராசிரியர் நோரியோ தானிகுச்சி 1974-ல் அத் தொழில்நுட்பத்தை நடைமுறைக்குக் கொணர்ந்தார். “என்சைக்ளோபீடியா பிரிட்டானியா போன்ற தகவல் களஞ் சியத்தை ஒரு ஊசி முனையில் எழுதிவிட லாம் ; இரத்த நாளங்களுக்குள் சிறிய மோட்டார்கள் பயணித்து அறுவைச் சிகிச்சை செய்துவிட முடியும்...இது போன்ற அறிவியல் அற்புதங்கள் நானோ தொழில்நுட்பத்தினால் சாத்தியமாகும்” என்று ஃபேன்மென் அன்றே அறிவித் தார். இன்று மிகப் பெரிய அளவுக்கு அவ ரது `ஆரூடங்கள்’ பலிக்கத் தொடங்கி யிருக்கின்றன.

விஞ்ஞான அற்புதங்கள்

நோயைக் கண்டுபிடித்து குணப்படுத் தக் கூடிய சிறிய பொருட்களை இன்று உடலுக்குள் செலுத்த முடியும் ; குறிப் பிட்ட செல்களுக்குள் கூட அவற்றைச் செலுத்த முடியும் ; மூலக்கூறுகளில் தகவல்களைச் சேகரித்து வைக்க முடியும் ; நூலகங்களில் உள்ள புத்தகங்கள் அனைத்தையும் கையடக்கமான கருவிக ளில் சேமித்து வைக்க முடியும். ஒரு தனிப் பட்ட னுசூஹ இழையின் மின்சாரம் கடத் தும் தன்மை அல்லது வேதியியல் கட்டு களின் (உாநஅiஉயட bடினேள) பலம் ஆகி யவை பற்றி ஆய்வு செய்ய முடியும். பொருட்களைத் துல்லியமாக ஆய்வு செய்யும்போது, பல புதிய நிகழ்வுகளைக் கண்டுபிடிக்க முடியும். உதாரணமாக, நீலத்திலிருந்து சிவப்பு வரை உள்ள எல்லா வண்ணங்களையும் வெளியிடக் கூடியதாக தங்கத்தை மாற்ற முடியும் ! இயற்கை விஞ்ஞானங்களை, ஆர்வத்தைத் தூண்டும் அற்புதங்களாக புதிய நிகழ்வு கள் மாற்றிவிட்டன.

நானோ தொழில்நுட்பத்தில் இது வரை 4,00,000 ஆய்வுக் கட்டுரை கள் வெளிவந்தி ருக்கின்றன.

1,00,000 உரிமங் கள் பெறப்பட் டுள்ளன. 2009ம் ஆண்டில் சுமார் 59,000 ஆய்வு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட் டன. இது 2000ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை களைப் போல ஐந்து மடங்கு அதிகம் !

உலகத்திற்கு இந்த தொழில்நுட்பத் தால் என்ன நன்மை என்ற கேள்வி எழலாம். ஒரு பொருளின் அணுக்களை நம் விருப்பப்படி கையாள முடிந்துவிட் டால், எத்தனையோ அதிசயங்களை நிகழ்த்த முடியும். தனிப்பட்ட ஒரு செல் லுக்கு மருத்துவ சிகிச்சையளிப்பது அறி வியல் புனைகதை போலத் தோன்றலாம். ஆனால் வாழ்வின் மூலக்கூறு எந்தி ரத்தை பழுது பார்த்து பராமரிப்பதன் மூலம் உடலியல் செயல்பாடுகளைக் கட் டுப்படுத்தவும், விரிவுபடுத்தவும் இயலும் என்பதை நானோ தொழில்நுட்பம் சாத் தியமாக்கிக் கொண்டு வருகிறது. மூலப் பொருட்களை மிகக் கடினமாக ஆக்க முடியும். மிகவும் லேசானதாகவும் ஆக்க முடியும்.

நானோ தொழில்நுட்பத்தின் ஆற்றல் திறன்

இயற்கையில் தாவரங்கள் கரியமில வாயுவையும் தண்ணீரையும் உட்கொண்டு சூரிய வெப்பத்தைப் பயன்படுத்திச் செய்துவரும் ஒளிச்சேர்க்கை அணு அணுவாகச் செயல்படும் தன்மையுடை யதுதான். நாம் உணவை உட்கொண்டு அது சக்தியாக மாறி, வேலை செய் வதற்கான ஆற்றலைப் பெறுவதில் வீணா கும் ஆற்றல் மிகக் குறைவு. மின்சார மோட்டார்களில் ஏற்படுவது போன்ற சக்திவிரயம் உடற்கூறியலில் அமைந் திருந்தால், உலகின் உணவு உற்பத்தி மக்கள் தொகையில் பத்தில் ஒரு பகுதி யினருக்கு உணவளிக்கக்கூடப் போது மானதாக இருந்திருக்காது. உடற்கூறியல் என்பதே நானோ தொழில்நுட்பம் மிகச் சிறப்பாகச் செயல்படும் ஒரு துறைதான். சூரியனிலிருந்து ஆற்றலைப் பெறுவதில் நானோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத் தும் முறை வந்துவிட்டால், இந்த பூமிக் குத் தேவையான அனைத்து ஆற்றல் களையும் எவ்வித சுற்றுச்சூழல் பிரச் சனையுமின்றி பெறமுடியும் !

No comments: