Thursday, February 11, 2010

பூமிக்கடியில் நியூட்ரினோ ஆராய்ச்சி மையம்

தேனி மாவட்டத்தில் பொட்டி புரம் அருகில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அழுத்தமான பாறை களுக்குக் கீழே பூமிக்கடியில் ஓரி டத்தை நியூட்ரினோ ஆராய்ச்சி மையம் (ஐனேயை-யௌநன சூநரவசinடி டீளெநசஎயவடிசல-ஐசூடீ) ஒன்றினை அமைப்பதற்குப் பொருத்தமான இடமாக புவியலாளர்கள் தேர்வு செய்துள்ளனர். இதற்கான ரூ. 900 கோடி நிதியை நமது அணுசக்தித் துறையும், அறிவியல் தொழில் நுட்பத் துறையும் வழங்க இருக்கின் றன. தமிழ்நாட்டு மலைகளில் `சார் னோக்கைட்’ என்ற வகை கடின மான பாறைகள் இருப்பதால், இப் படிப்பட்ட நிலையத்தை அமைப்ப தற்கு ஏற்ற இடமாக அவை கருதப்படுகின்றன. முதலில் இதே மாதிரி அழுத்தமான பாறைகள் உள்ள நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சிங்காரா மலைப்பகுதியில் இந்த நிலையத்தை அமைப்பதாக முடிவு செய்திருந்தனர். ஆனால் அந்த இடம் பந்திபூர்-முதுமலை புலிகள் சரணாலயத்தின் அருகே இருந்ததாலும், யானைகள் வரத்து அதிகம் உள்ள இடமாக இருந்த தாலும் அந்த முடிவு பிறகு கை விடப்பட்டது.

மிகப் பெரிய திட்டம்

அடிப்படை அறிவியல் ஆராய்ச் சியில் ஒரு மிகப் பெரிய திட்டம் தான் ஐசூடீ. அதிக சக்தி இயற்பிய லில் (ழiபா நநேசபல யீாலளiஉள) முக் கியமான ஆய்வுகளை இது மேற் கொள்ள இருக்கிறது. இயற்பியலில் இதுவரை விடை தெரியாத கேள்வி களுக்கு விடை கண்டுபிடிக்கும் விதத்தில் உலகத்தரம் வாய்ந்ததாக இந்த மையம் அமைக்கப்பட உள் ளது. இப்படிப்பட்ட ஒரு நிலையம் அமைப்பது பற்றி 1989-ம் ஆண்டு முதலே பரிசீலனை செய்யப்பட்டு வந்தாலும், தற்போது தான் அது நிறைவேறும் கட்டம் வந்திருக் கிறது. கூஐகுசு-ன் மேற்பார்வையில், 25 அறிவியல் நிறுவனங்களும், 90 விஞ்ஞானிகளும் இத்திட்டத்தில் பங்கேற்க உள்ளனர். பல் வேறு துகள்கள் பற்றியும் பிர பஞ்சம் உருவான விதம் பற்றியும் நட்சத்திரங்களில் தொடர்ந்து உற்பத்தியாகும் சக்தி பற்றியும் மேலும் பல தகவல்களை அறிந்து கொள்ள இந்த மையம் உதவி செய்ய இருக்கிறது. மாணவர்கள் தங்கள் ஆய் வுத்திட்டங்களை மேற் கொள்ளத் தகுந்த இடமாக வும் இந்த நிலையம் அமைய வாய்ப்பிருக்கிறது.

கனடா, ஜப்பான், இத் தாலி, அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகள்தான் இது வரை நியூட்ரான் ஆய்வு மையங்களை அமைத்துள் ளன. அடுத்து இந்தியாவில் தான். எனவே, இந்த மையம் பற்றி உலக அளவி லேயே விஞ்ஞானிகள் ஆர் வம் செலுத்தத் தொடங்கி யுள்ளனர்.

நியூட்ரினோக்கள் என்றால்...

பிரபஞ்சத்தில் உள்ள அடிப்படை துகள்க ளில் ஒன்றுதான் நியூட்ரினோ. இதன் பொருட்திணிவு எலெக்ட்ரானின் பொருட் திணிவுக் குச் சமமானது. ஆனால் நியூட்ரா னில் மின்னேற்றம் கிடையாது. அதனால் எலெக்ட் ரானைப் போல இது மின்காந்த விசையினால் எந்த பாதிப்பையும் அடையாது. அணுவுக்குள் உள்ள பலவீனமான ஈர்ப்பு விசையினால் மட்டுமே அது ஈர்க்கப்படும் என்ப தால், பொருட்களின் ஊடாக அது எளிதாகச் செல்ல முடியும். எனவே, அதைக் கண்டுபிடிப்பது மிக சிரமமானது. சூரியனும் பிற நட்சத் திரங்களும் நியூட்ரான்களைத் தொடர்ந்து உற்பத்தி செய்து கொண்டே இருக்கின்றன. பிரபஞ் சத்தில் உள்ள துகள்களில் அதிக எண்ணிக்கையில் உள்ளவை இவைதான். அவை பூமிக்கு எவ்வி தத் தடையுமின்றி வந்து சேருகின் றன. அத்தோடு வேறு துகள்களும் இப்படி வந்து சேருகின்றன. ஆனால் ஆராய்ச்சி மையத்தின் மேலுள்ள கடினமான பூமிப்பகுதி நியூட்ரான்களைத் தவிர வேறு துகள்கள் அனைத்தையும் தடுத்து நிறுத்திவிடும்.

கதிர்வீச்சு பயம் தேவையற்றது

பூமியின் மேற்பரப்பில் காஸ்மிக் கதிர்களிடமிருந்தும் இயற்கையி லேயே கதிர்வீச்சை வெளியிடும் தனிமங்களாலும் கதிர்வீச்சு இருந்து கொண்டேதான் இருக் கிறது. இந்த கதிர்வீச்சின் பாதிப்பு எதுவுமின்றி நியூட்ரான்கள் மீது ஆராய்ச்சி நடத்த வேண்டும் என் பதால்தான் ஆராய்ச்சி மையத் தையே பாறைகளுக்கடியில் -அதுவும் சுமார் 1300 மீட்டர் (4265 அடி) ஆழத்தில் - அமைக்க வேண் டியிருக்கிறது. அப்படியிருக்க அந்த மையத்திலிருந்து கதிர்வீச்சு அபாயம் இருக்கும் என்று கூறுவ தற்கு எந்த அறிவியல் அடிப்படை யும் கிடையாது. கதிர்வீச்சு பாதிப்பு இருக்கும் என உள்ளூர் மக்களும், சுற்றுச்சூழலாளர்களும் கருதிய தால், அவர்களது அச்சத்தைப் போக்கும் நோக்கத்தில் அண் மையில் தேனி மாவட்டத்தில் விஞ் ஞானிகள் ஒரு விழிப்புணர்வுக் கூட் டம் நடத்தினர். மும்பையில் உள்ள டாடா அடிப்படை அறிவியல் ஆய்வு மையத்தைச் (கூயவய ஐளேவவைரவந டிக குரனேயஅநவேயட சுநளநயசஉா- கூஐகுசு) சேர்ந்த நோபா கே.மோண்டல், உள்ளூர் மக்களின் ஆதரவோடும் ஒத்துழைப்போடும்தான் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்று உறுதி யளித்தார். மரங்களை வெட்டத் தேவையில்லை என்றும், மக்கள் இடம் பெயரத் தேவையிருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் மக்களிடம் இது குறித்து பிரச்சாரம் செய்ய இருக்கிறது.

தேவையான விளக்கங்களைப் பெறுவோம். ஆதாரமற்ற அச்சங் களைத் தவிர்ப்போம் !

நன்றி: தீக்கதிர்

4 comments:

abubacker said...

excellent job....

மணிப்பக்கம் said...

:) nice ... !

சுபாஷ் said...

தலைப்பில் நியூட்ரினோ என்று இருக்கிறது. உள்ளுக்குள் நியூட்ரான் என்று இருக்கிறது. இந்தமாதிரித் தவறுகள் சொல்லப்படும் செய்திகளைப் பயனற்றதாக்கிவிடும்.......

சுபாஷ் said...

தலைப்பில் நியூட்ரினோ என்று இருக்கிறது. உள்ளுக்குள் நியூட்ரான் என்று இருக்கிறது. இந்தமாதிரித் தவறுகள் சொல்லப்படும் செய்திகளைப் பயனற்றதாக்கிவிடும்.......