Thursday, January 28, 2010

சுட்டெரிக்கும் வெயில் காலங்களுக்கேற்ற ஆடை எது?

கோடைகாலத்தில் வெள்ளை அல்லது வெளிர் நிறத்தில் உள்ள மெலிதான ஆடைகளை அணிவது நல்லது என்பதை அனுபவரீதியாக உணர்ந்திருப் பீர்கள். வியர்வையை உறிஞ்சக்கூடிய பருத்தி ஆடைகளே கோடைகாலத்திற்கேற்றவை. வெள்ளை அல்லது வெளிர்நிற உடை எனில் சூரிய வெளிச்சத் தைப் பெருமளவு பிரதிபலித்துவிடும். அதனால் வெப்பம் நம் உடலை அதிகமாகத் தாக்காது. கருப்பு அல்லது அடர்த்தியான நிறமுள்ள உடை எனில் வெப்பத்தை அதிகமாக உள்வாங்கிக் கொள்ளும். எனவே அம்மாதிரியான உடைகளை கோடை காலத்தில் தவிர்த்துவிடலாம்.

அதே சமயம், கருப்பு அல்லது அடர்த்திநிற உள் ளாடையை உள்ளேயும், வெள்ளை அல்லது வெளிர்நிற உடையை வெளியேயும் அணிவதில் ஒரு நன்மை உண்டு. வெளியே உள்ள உடையைத் தாண்டி உள்ளே செல் லக்கூடிய வெப்பத்தை உள்ளாடை உறிஞ்சி நம் தோலையொட்டியுள்ள காற்றை சற்று சூடுபடுத்தும். அந்தக் காற்று இலேசாகி வெளியேறும்போது வெளியே உள்ள காற்று அந்த இடத்தை நிரப்ப உள்ளே வரும். இது ஒரு வெப்பசலனத்தை ஏற்படுத்துவதால் காற் றோட்டம் கிடைத்து உடலுக்குச் சிறிது நிவாரணம் கிடைக்கும்.

குளிர்காலத்தில் நம் உடலின் மற்ற பாகங்களைவிட கைவிரல்களும்,
மூக்கு-காது நுனிகளும் குளிர்ச்சியாக இருப்பது ஏன்?

இரண்டு வித்தியாசமான அளவுள்ள உலோக கப்புகளில் உள்ள தண்ணீர் எப்படி குளிர்ச் சியடைவதில் வேறுபடு கிறது என்பதை வைத்து இதைப் புரிந்து கொள்ளலாம். தண்ணீ ருடைய மேற்பரப்பின் அளவு குளிர்ச்சியடையும் வேகத் தைத் தீர்மானிக்கிறது. 5 செ.மீ. உயரம், 5 செ.மீ. நீளம், 5 செ.மீ. அகலம் உள்ள கப் பில் ( இந்தக் கப்பின் மேற் பரப்பு 25 சதுர செ.மீ.-கொள் ளளவு 125 கன செ.மீ.) உள்ள தண்ணீர், 10 செ.மீ. உயரம், 10 செ.மீ. நீளம், 10 செ.மீ. அகலம் உள்ள கப்பில் (மேற்பரப்பு 100 சதுர செ.மீ.-கொள்ளளவு 1000 கன செ.மீ.) உள்ள தண் ணீரைவிட சீக்கிரம் குளிர்ந்து விடும். இதற்குக் காரணம், ஒரு கன சென்டிமீட்டர் கொள் ளளவுக்கு அதிக மேற்பரப்பு எந்த கப்பிற்கு உள்ளதோ அந்த கப்பில் உள்ள நீர் சீக்கிரம் குளிர்ச்சியடைகிறது. மேற் கண்ட உதாரணத்தில், முதல் கப்பில் ஒரு கன செ.மீ. கொள் ளளவுக்கு 25/125 = 1/5 சதுர செ.மீ. ஆகவும் இரண்டாவது கப்பில் ஒரு கன செ.மீ. கொள் ளளவுக்கு 100/1000 = 1/10 சதுர செ.மீ. ஆகவும் இருப்ப தால் முதல் கப்பில் உள்ள நீர் சீக்கிரம் குளிர்ச்சியடைகிறது. நம் உடல், வெப்பத்தை உள்ள டக்கிய ஒரு பாத்திரத்திற்கு ஒப் பானது. உடலின் மற்ற பாகங் களைவிட விரல்கள், காது-மூக்கு நுனிகளின் அமைப்பு ஒரு கனசெ.மீ. கொள்ளள வுக்கு அதிக மேற்பரப்பு உள்ள தாக இருப்பதால் அந்தப் பகு திகள் சீக்கிரம் குளிர்ந்துவிடு கின்றன. மற்ற பாகங்கள் குளிர்ச்சியடைய கூடுதல் நேரத்தை எடுத்துக் கொள்ளும்.

தண்ணீருக்கு நிறம் கிடையாது. ஆனால் ஓர் அருவியிலிருந்து கீழே விழும் நீர் வெண்மையாகத் தோன்று கிறதே, அது எப்படி?

ஒரு பொருள் எல்லா நிறங்களையும் பிரதிபலிக்கக்கூடியது எனில், அது வெண் மையாகத் தோன்றும். வெள்ளைத்தாள், முகப்பவுடர், மேகம், நீராவி, மூடுபனி போன்றவை வெண்மையாகத் தெரிவதற் குக் காரணம் இதுதான். அருவியிலுள்ள நீர்த்துளிகளைச் சுற்றி காற்று இருக்கிறது. காற்றிலிருந்து ஒளி நீருக்குள் புகும்போது, ஒளிவிலகல் எண் வேறுபடுவதால், அது ஒளிவிலகலுக்கும், பிரதிபலிப்பிற்கும் உள்ளாகிறது. அருவியிலுள்ள ஆயிரக் கணக்கான நீர்த்திவலைகளிலிருந்து பிரதி பலிக்கப்படும் ஒளி ஒன்று சேர்வதால் அது வெண்மையான தோற்றத்தைத் தருகிறது

No comments: