Friday, June 26, 2009

நம் எதிர்காலம் நம் கைகளில்1970களின் மத்தியில் தலைசிறந்த மேற்கத்திய உலகின் விஞ்ஞானிகள் - அவர்களில் சிலர் நோபல் பரிசு பெற்ற வர்கள் - கீழ்க்கண்ட அறிக்கையை மனித இனத்தின் பரிசீலனைக்காக வெளியிட் டனர்:

நம்முடைய எதிர்காலம்

நம் கைகளில்

“நாம் பிறக்கும் `குறிப்பிட்ட அந்த நேரத்தில்’ நட்சத்திரங்களும் கிரகங்க ளும் செலுத்தும் `விசைகள்’ நம்முடைய எதிர்காலத்தை நிர்ணயிக்கவல்லவை என்று நினைத்துக் கொள்வது தவறு. ஒரு சில செயல்களில் ஈடுபடுவதற்கு உகந்ததாக சில நாட்களையோ, நேரங் களையோ வெகு தூரத்தில் உள்ள நட்சத் திரங்களும் கிரகங்களும் நிர்ணயிக்கின் றன என்பதோ, ஒருவர் பிறந்த ராசி அவர் மற்றவர்களுடன் இணக்கமாகவோ இணக்கமின்றியோ இருப்பதைத் தீர்மா னிக்கிறது என்பதோ உண்மையல்ல. தங்களது எதிர்காலம் நிச்சயமற்றதாகத் தோன்றும் சூழலில் முடிவெடுப்பதில் தங்களுக்கு ஏதாவது ஆலோசனை எங் கிருந்தாவது கிட்டாதா என்று பலர் ஏங்குகின்றனர். அப்படி ஆலோசனை கிடைப்பது அவர்களுக்கு மிகவும் சுகமா னது; சவுகரியமானது. தங்களுடைய சக்திக்கு அப்பாற்பட்ட விண்ணுலக சக் திகள் தங்களுடைய தலைவிதியை நிர் ணயித்துவிடுகின்றன என்று நம்புவ தையே அவர்கள் விரும்புகின்றனர். ஆனால் உண்மை என்னவெனில், இந்த உலகம் நமக்குத் தரும் பிரச்சனைகளை நாம்தான் எதிர்கொள்ள வேண்டும். நம் முடைய எதிர்காலம் நம்முடைய கை களில்தான் உள்ளதே தவிர, நட்சத் திரங்களில் அல்ல”.

பொதுவாக மனிதர்கள் பாரம்பரிய நம்பிக்கைகளில் கட்டுண்டவர்கள். இந்த நம்பிக்கைகள் அவர்களது கலாச்சாரம் மற்றும் மத நம்பிக்கைகளோடு பின்னிப் பிணைந்தவை. அந்த நம்பிக்கைகளை அறிவியல் மனப்பான்மைக்குரிய விமர் சன ஆய்வுக்கு உட்படுத்தும்போது முரண்பாடுகள் தவிர்க்கமுடியாதபடி எழு கின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன் இப்படிப்பட்ட நம்பிக்கைகள் இருந்த தற்கு அன்று கிடைத்த தகவல்களின்படி தர்க்கரீதியான காரணங்கள் இருந்திருக் கலாம். ஆனால் இன்றைய அறிவியல் வளர்ச்சியின் வெளிச்சத்தில் அப்படிப் பட்ட காரணங்கள் இல்லை.

ஏற்கவேண்டியவையும் நிராகரிக்க வேண்டியவையும்

பாரம்பரியமான விஷயங்களில் சமூ கத்திற்கு ஒருவர் ஆற்றவேண்டிய கட மை, எல்லோருமே நலமாக இருக்க வேண்டும் என்று சமூகம் ஏற்றுக் கொண்ட தர்மம், இயற்கைச் சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு இவையெல்லாம் போற்றப்பட வேண்டி யவை. இன்று மட்டுமல்ல என்றுமே கடைப்பிடிக்கப்பட வேண்டியவை. இந்த இடத்தில்தான் அறிவியல் மனப்பான்மை யின் பங்கு வருகிறது. பாரம்பரியமான விஷயங்களில் எதை ஏற்க வேண்டும், எதை நிராகரிக்க வேண்டும் என்று பகுத்தறிய அது உதவுகிறது.

அறிவியல், தொழில்நுட்ப முன்னேற் றம் கட்டுப்பாடின்றி வளர்கையில் அவற் றின் தீய விளைவுகளை சமூகம் இன்று சந்தித்துக் கொண்டிருக்கிறது. அணு ஆயுதக் குவியல், ஆலைகளினால் சுற் றுச்சூழல் மாசுபடுவது, இயந்திரங்களே மனிதனின் பல்வேறு வேலைகளை எடுத் துக் கொண்டுவிடுவதால் விளையும் சோம்பேறித்தனம், அதன் விளைவாக உருவாகும் உளவியல் பிரச்சனைகள்... இவையெல்லாம் சில தீய விளைவுகள். ஆனால் தீய விளைவுகள் இருக்கின்றன என்பதாலேயே இனி அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றமே வேண்டாம் என்று கட்டுப்பெட்டித்தனமாக முடிவு செய்துவிட இயலுமா? அப்படிப்பட்ட தீர்வை நம் நாட்டில் மட்டுமல்ல, வளர்ந்த நாடுகளில் உள்ள சிலர் கூட முன்மொழி கின்றனர். அது தீய விளைவுகளைக் கண்டு அஞ்சி ஓடி ஒளியும் மனப்பான் மையே. காலச்சக்கரம் எப்போதும் முன் னோக்கியேதான் செல்லும். பாரம்பரிய மான விஷயங்களில் நல்லவற்றை உள் வாங்கிக் கொண்டு அறிவியல் பார்வை யுடன் பிரச்சனைகளை அணுகினால், எந்தப் பிரச்சனைக்கும் அறிவுபூர்வமான தீர்வைக் கண்டுபிடித்துவிட முடியும்.

நேரு எதிர்பார்த்தபடி நாடு சுதந்திரம் அடைந்தபிறகு மக்கள் மூடநம்பிக்கை களிலிருந்து விடுபட்டு சுதந்திரச் சிந் தனை உலகிற்கு வந்து சேர்ந்துவிட்டார் களா? ஒரு புறம், பல அரசு சாரா அமைப் புகளும் அறிவியல் அமைப்புகளும் பகுத் தறிவைப் பரப்புவதிலும் மூடநம்பிக்கை களுக்கு எதிரான பிரச்சாரத்தைச் செய் வதிலும் ஈடுபட்டுள்ளன. ஆனால் கடந்த 60 ஆண்டுகளில் மூடநம்பிக்கைகளுக் கெதிரான போராட்டத்தில் நம் நாடு அடைந்துள்ள முன்னேற்றம் என்ன? பெரிதாகச் சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்பதுதான் உண்மை. மூடநம் பிக்கை என்றதும் அது கிராமங்களில் படிப்பறிவு இல்லாத மக்களிடம் உள்ளது என்று பரவலாக ஒரு கருத்து இருக் கிறது. நகரத்தில் உள்ள உயர் பட்டம் பெற்றவர்களையும் அது விட்டுவிட வில்லை என்பது சில ஆண்டுகளுக்கு முன் விநாயகக் கடவுள் பால் குடிப்ப தாகக் கிளம்பிய புரளியின்போது வெளிப் பட்டது. டில்லி, மும்பை, சென்னை போன்ற பெருநகரங்களிலும் பால் பாத்திரங்களு டன் மக்கள் கூட்டம் கூட்டமாக அலைந் ததை நாம் மறந்துவிட முடியாது.

நன்றி: பேராசிரியர் கே. ராஜு

No comments: