Thursday, March 26, 2009

பகலில் நட்சத்திரங்களைப் பார்க்க முடியுமா?

பகலில் நட்சத்திரங்களைப் பார்க்க முடிவதில்லை. அது சூரியன் இரவில் மறைவதைப் போலத்தானா? அல்ல. சூரியன் இரவில் மறைவதற்குக் காரணம் பூமி தன்னைத்தானே சுற்றிவரும்போது சூரியன் தெரி யாத பகுதிக்குள் நாம் இருப்ப தால் தான். ஆனால் நட்சத்தி ரங்கள் பகலில் நம் கண்களுக்குப் புலப்படாமல் போவதற்குக் காரணம், சூரியக் கதிர்களின் பளீரென்ற வெளிச் சமே. சூரிய வெளிச்சம் பட்டதும் காற்று மண்டலத் தில் உள்ள தூசுக்கள், வாயுக்கள், நீர்த்திவலைகள் எல்லாம் சூரிய ஒளியை எல்லா திசைகளிலும் சிதறச் செய்வதால் வான்வெளி நன்கு பிரகாசிக்கத் தொடங்குகிறது. இந்த ஒளியுடன் ஒப்பிடும்போது நட்சத்திரங்களிலிருந்து வரும் ஒளி மிகவும் குறைவு என்பதால் (தொலைவு காரணமாக) அவை கண்ணுக்குத் தெரிவதில்லை. விண்வெளியில் காற்று மண்டலத்திற்கு மேல் சென்றுவிட்டால் ஒளிச்சிதறல் இருக்காது என்பதால் அங்கு பகலிலும் நட்சத்திரங்கள் தெரியும்.

1 comment:

ராஜ நடராஜன் said...

//விண்வெளியில் காற்று மண்டலத்திற்கு மேல் சென்றுவிட்டால் ஒளிச்சிதறல் இருக்காது என்பதால் அங்கு பகலிலும் நட்சத்திரங்கள் தெரியும். //

தகவலுக்கு நன்றி.