Wednesday, March 25, 2009

நண்டுகள் தங்கள் வளைகளை எப்படிக் கண்டுபிடித்துத் திரும்புகின்றன?

உணவுக்காக வெளியே அங்கும் இங்கும் அலையும் நண்டுகள் வளைக்குத் திரும் புகையில் தங்கள் வளை யைச் சரியாக அடையாளம் வைத்துத் திரும்புகின்றனவே, அது எப்படி?

பொதுவாக விலங்குகள் திசையையும் தாங்கள் திரும் பவேண்டிய தூரத்தையும் இணைக்கும் ரகசியத்தைத் தெரிந்து வைத்துள்ளன. அவை தூரத்தை எப்படி அளக்கின் றன என்பது புதிராகவே இருந்து வருகிறது. உதா ரணமாக, தான் கடந்து செல் லும் நிலப்பகுதியைத் தேனீ கணக்கு வைத்துக் கொள்கி றது. வேறு சில விலங்குகள் தாங்கள் செல்லும் வேகத் தைக் கணக்கிட்டு அதிலிருந்து தூரத்தை அறிந்து கொள் கின்றன ! தற்போது நண்டு கள் தங்களுடைய கால் அசைவுகளை வைத்து தூரத் தை அளவிடுகின்றன என்று தெரிய வந்துள்ளது.

தன்னுடைய வளையை நோக்கித் திரும்பும் ஒரு நண் டின் பாதையில் வழுக்கி விடக் கூடிய ஒரு திரவத்தை ஊற்றி அது எப்படிச் செல்கி றது என்பதை சின்சினாட்டி பல்கலைக்கழக ஆய்வாளர் கள் கவனித்தனர். “சாதா ரண தரையிலும் வழுக்கி விடும் பரப்பிலும் அது ஒரே எண்ணிக்கையிலான அடி களை எடுத்து வைக்கிறது. சாதா ரண தரையில் ஒரு குறிப் பிட்ட அளவு அடிகளை எடுத்து வைத்து அது தன் வளையை அடைகிறது. ஆனால் வழுக்கும் தரையில் அது அதே அளவு அடிகளை எடுத்து வைத்தாலும் சில இடங்களில் வழுக்கிவிடு வதால் முன்னேற முடியா மல் அது தன் வளையை அடைய முடிவதில்லை” என்று அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

நண்டு எப்படியோ வளையைத் தேடிக் கண்டு பிடித்துக் கொள்கிறது... அதைப் பற்றி நமக்கென்ன என்று இருக்காமல் அதன் ரகசியத்தைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் முனைகி றார்களே அதுதான் அறிவி யலின் உந்துசக்தி !

3 comments:

யூர்கன் க்ருகியர் said...

நாய்கள் கூட போகும் வழி எல்லாம் "பிஸ்ஸ்" ( ஐ மீன் : சிறுநீர் ) அடித்துக்கொண்டே போகுமாம். வரும் போது மோப்பம் பிடித்து கொண்டே சரியாக மீண்டும் புறப்பட்ட இடத்தை அடைந்து விடுமாம்.

குறிப்பு : போது இடத்தில சிறுநீர் கழிக்கும் மனிதர்களுக்கும் இதற்கும் சம்மந்தமில்லை!

கோவி.கண்ணன் said...

நண்டு கொழுத்தால் வலையில் தங்காது என்ற பழமொழியும் உண்டு !
:)

ராஜ நடராஜன் said...

//நண்டு எப்படியோ வளையைத் தேடிக் கண்டு பிடித்துக் கொள்கிறது... அதைப் பற்றி நமக்கென்ன என்று இருக்காமல் அதன் ரகசியத்தைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் முனைகி றார்களே அதுதான் அறிவி யலின் உந்துசக்தி ! //

கண்டு பிடி!கண்டு பிடின்னு ஊக்குவிப்பதாலேயே இது சாத்தியமாகிறது.குளோனிங் செய்யுங்கன்னு ஒபாமா தலையசைத்து விட்டாராம்.