பூமி என்ற கோள் உண்டாகி 450 கோடி ஆண்டுகள் உருண்டோடி விட்டன. பூமி தோன்றிய பொழுது இப்போது இருப்பது போன்று இல்லை, இனிமேலும் இப்படியே இருக்கப் போவதும் இல்லை. பூமி என்பது தன்னைத் தானேயும், சூரியனையும் சுற்றி வருகிறது. இயங்கக்கூடிய எதுவும் மாறக் கூடியதுதான்.
பூமியில் முதலில் பெரும்பகுதி கடலாக வும், சிறுபகுதி முழுமையான தரையாகவும் இருந்தது. இன்று 6 கண்டங்கள், பல தீவுகள் என சிதறியுள்ளது. நிலநடுக்கம், கண்டத் திட்டு மாறுதல், பூமிக்கு அடியில் உள்ள தட்டுகள் நகர்தல், எரிமலை, நில அரிப்பு, கடல் உள்வாங்கல், தரைப்பகுதி முழுகுதல் என பல பேரழிவுகள் தொடர்ந்து பூமியின் தரைப்பகுதியில் நடந்து கொண்டுதான் உள் ளது.
இவைகள் எதை காட்டுகிறது. பூமியில் நிலவியல் மாற்றம் என்பதைத்தான்! பூமியில் உயிரினங்கள் சுமார் 16 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தான் தோன்றியுள்ளது.மனிதன் முத லில் ஆப்பிரிக்காவிலும், பின்னர் அதன் பரி ணாமம் ஆசியா கண்டத்திலும் நடந்தேறி 1 கோடியே 60 லட்சம் ஆண்டுக்கு முன் தோன்றியுள்ளான்.
பூமியில் கார்பானிபரஸ் யுகத்தில் வயதில் சுமார் 250 கோடி - 15 கோடி ஆண்டுகள் காலத்தில் பல தரை வாழ் உயிரிகள் இருந்து அழிந்துள்ளன என்பது தெளிவு. இன்றைய காலகட் டத்தில் சிறிய தூக்கணான் குருவிகள் இல்லை - புலிகள் அழிந்து கொண்டு வரு கின்றன. மனித குரங்கை காணவில்லை. இது ஏன்?
மனிதன் அவைகளின் சுற்றுச்சூழலை அழித்து வருவதுதான் காரணம்.
பூமி தனக்கான சட்ட திட்டங்களை வைத்துள்ளது. புதிய உயிரினம் தோன்றும் பழையன அழிவதும் நடந்து வருகிறது. ஆம்! ட்ரையாசிக், சூராசிக், கிரிட்டேசியஸ் என்ற காலகட்டத்தில் (யுகத்தில்) சுமார் 100 லட்சம் வருடம்- டைனோசர் என்ற விலங்கு தரைப்பகுதியில் வாழ்ந்துள்ளது. கிரிட்டேசி யஸ் 160 மில்லியன் வருடம் முன் இவை அழிந்துள்ளது.
இதன் பின்னரே சிறிய பாலூட்டிகள் வளர்ந்து, பரிணாமம் அடைந்து மனித இனம் உருவாக வழியும் கிடைத்தது.
இயற்கை விதியில் ஒரு உயிரினம் மற் றொன்றை சார்ந்து இருக்கும். டைனோசர்
3 யானை சேர்ந்த உடம்பு, சுமார் 20 டன் முதல் 60 டன் எடை! தட்பவெப்ப மாற்ற (சீதோஷ்ண) நிலையில் அவை அழிந்துள்ளன என்பது நிரூ பிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் அரியலூர் பகுதியில் டைனோசர் வாழ்ந்து மடிந்துள்ளன. அகழ் வாராய்ச்சியில் சுண்ணாம்பு கல் சுரங்க பணி யில் கயர்லாபாத், காட்டுபிரிங்கம், கல்லங் குறிச்சி, அரியலூர் அருகில் உள்ள கிராமத் தில்! டைனோசர், மனித இனம் தோன்றாத காலத்தில் இருந்துள்ளன. அதன் முட்டை இன்றும் உள்ளது. அது அரியலூர் அரசு சிமெண்ட் ஆலையில் பாதுகாக்கப்படுகிறது. பூமியில் அழிவு, பேரழிவு என்பதெல்லாம் பூமி யைப் பொறுத்தமட்டில் சகஜமான ஒன்று தான். மனிதனின் அளவுக்கு மீறிய செயல் பாட்டால், சுற்றுச்சூழல் அழிந்து வருவதால் மேலும் பல உயிரினங்கள் அழிவது துரிதப் பட்டு வருகிறது.
No comments:
Post a Comment