Friday, December 12, 2008

எருக்குழி கழிவறைகள்

நாம் பொதுவாகப் பயன்படுத்தும் ஃப்ளஷ் கழி வறைகளில் (கடரளா வடிடைநவள) ஏராளமான தண்ணீர் தேவைப் படுகிறது. தண்ணீர் பற்றாக் குறை உள்ள இடங்களில் இந்தக் கழிவறைகளுக்கு மாற்றாக எருக்குழி கழிவ றைகள் (நுஉடிளயn வடிடைநவள) அமு லுக்கு வந்திருக்கின்றன. ஃப்ளஷ் கழிவறைகளில் தேவைப்ப டும் நீரில் 60 சதம் நீர் இம் முறையில் மிச்சப்படுகிறது. இவ்வகைக் கழிவறைகள் திருச்சி, கடலூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் சில இடங்களில் பயன்படுத் தப்பட்டு வருகின்றன. ,

எருக்குழி கழிவறைகள் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து விளைவிக்காதவை. இந்தக் கழிவறைகளில் சிறுநீரும் திடக்கழிவும் அருவருப் பானவையாகப் பார்க்கப் படாமல், விலைமதிப்பற்ற பொருட்களாகப் பார்க்கப் படுகின்றன. கழிவறையில் உள்ள இரட்டை அறையில் சிறுநீரும் திடக்கழிவும் முதலில் பிரிக்கப்படுகின் றன. சிறுநீரும் வீணாகும் நீரும் தோட்டச் செடிகளுக்கு விடப்படுகின்றன. திடக்கழிவு ஒரு குழியில் சேர்க்கப்படு கிறது. அதன் மேல் சாம்பல் தூவப்படுகிறது. ஆண்டுக் கொரு முறை இது அகற்றப் பட்டு உரமாகப் பயன்படுத் தப்படுகிறது. மிகக்குறை வான நீரே செலவானாலும் கெட்ட வாடை எதுவும் வீசு வதில்லை என்பது எருக் குழி கழிவறைகளின் சிறப்பு. ஃப்ளஷ் கழிவறைகளினால் சுத்தமான நீர் நிலைகள் அசுத்த நீரினால் மாசுபடும் ஆபத்து எப்போதுமே உண்டு. ஆனால் எருக்குழி கழிவ றைகளில் அந்த ஆபத்து அறவே நீக்கப்படுகிறது.

இக்கழிவறைகள் செயல் படும் முறை பற்றி ஆய்வு செய்ய ஜெர்மனியிலிருந்து வந்துள்ள சுற்றுச்சூழல் மற் றும் இயற்கைப் பாதுகாப்பு ஆர்வலர்கள் “இது ஓர் அருமையான முன்மாதிரி கழிவறை. இந்திய மக்கள் மென்மேலும் எருக்குழி கழிவறைகளுக்கு மாறுவது அவசியம். ஜெர்மனியில் இதற்கான உடனடித் தேவை இல்லாவிடினும் இவ்வகை கழிவறை ஜெர்மனிக்கும் பொருத்தமானதுதான்” என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.

(தகவல் : தி இந்து).உருளைக்கிழங்கின் மகத்துவம்

உலக அமைப்புகள் ஒவ்வோர் ஆண்டையும் எய்ட்ஸ் நோய் ஒழிப்பு, தொழுநோய் ஒழிப்பு, புகையிலை எதிர்ப்பு போன்ற ஏதாவதொரு உன் னத நோக்கத்திற்கு அர்ப்பணிக்கின் றன. ஒரு சுவாரசியமான விஷயம், 2008ம் ஆண்டை உருளைக்கிழங் கின் சர்வதேச ஆண்டாக அறிவித்தி ருக்கிறார்கள்! எந்த காய்கறிக்கும் இவ் வளவு உயர்ந்த அந்தஸ்து கிடைத்த தில்லை.

கடந்த ஆண்டில் மட்டும் உல கில் 32 கோடி டன் உருளைக்கிழங்கு விளைவிக்கப்பட்டது. அதாவது, உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் 34 கிலோ என்ற வீதத்தில் இந்த உற் பத்தி இருந்தது. ஒரு நாளைக்கு ஐரோப் பியர்கள் 300 கிராம் உருளைக்கிழங் கை உட்கொள்கிறார்கள். இந்திய சரா சரி குறைவுதான். நாம் ஒரு நாளைக்கு 60 கிராம் மட்டுமே உட்கொள்கிறோம்.

மிக அதிக மக்கள் தொகை கொண்ட சீனா, உருளைக்கிழங்கு உற்பத்தியி லும் முதல் இடத்தைப் பெறுகிறது. ரஷ்யா அதற்கடுத்தும், இந்தியா மூன் றாவது இடத்திலும் வருகின்றன. உரு ளைக்கிழங்கின் முக்கியத்துவத்தை மத்திய அரசு உணர்ந்திருப்பது மகிழ்ச் சிக்குரிய விஷயம். அரிசி, சோளம், பருத்தி போன்ற பொருட்களுக்கு ஆராய்ச்சி நிறுவனங்களை அமைத் திருப்பது போல உருளைக்கிழங்கிற் கும் மத்திய ஆராய்ச்சி நிறுவனத்தை சிம்லாவில் அமைத்திருக்கிறது. உரு ளைக்கிழங்கு உற்பத்தியை அடுத்த ஆண்டு இருமடங்காக்குவது என அரசு முடிவு செய்திருக்கிறது.

அதெல்லாம் சரி, உருளைக்கிழங் கின் மேல் ஏன் இவ்வளவு கரிசனம்? அரிசிக்கும் கோதுமைக்கும் அடுத்து சொல்லக்கூடிய அருமையான உண வுப் பொருளாக உருளைக்கிழங்கு வருகிறது. கார்போஹைட்ரேட், புரோட் டீன், வைட்டமின்-சி, பொட்டாசியம் போன்ற அருமையான ஊட்டச்சத்து கள் நிறைந்தது. கிழங்குவகைகளில் மிக அதிக புரோட்டீன் உள்ள கிழங்கு உருளைக்கிழங்குதான். தட்பவெப்ப சூழல் சாதகமாக இல்லாத இடங் களில் கூட உருளைக் கிழங்கு பயி ரிட முடியும். குறைவான நிலம் இருந் தாலும் போதுமானது,

பெரு, பொலிவியா பகுதிகளில் வசித்த ஆன்டியன்களுக்கு 8000 ஆண்டுகளுக்கு முன்பே உருளைக் கிழங்கு பயிரிடத் தெரிந்திருந்தது. அவர்கள் உருளைக்கிழங்கின் நூற் றுக்கணக்கான வகைகளைப் பயிரிட வும் கற்றுக் கொண்டனர். இந்த மர பணுப் பன்முகத் தன்மையே உரு ளைக்கிழங்கு உலகம் முழுவதும் வெற்றிகரமான உணவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட காரணம்.

No comments: